தமிழகத்தில் "இ-ஸ்மார்ட்' வகுப்பறை 100 பள்ளிகளில் துவக்க முடிவு

காரியாபட்டி : "தமிழகத்தில் 100 பள்ளிகளில் "இ-ஸ்மார்ட்' வகுப்பறை விரைவில் துவக்க முடிவு செய்யப் பட்டுள்ளது' என அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.காரியாபட்டி மல்லாங்கிணர் அரசு மேல்நிலை பள்ளியில் "இ-ஸ்மார்ட்' வகுப்பறை திறப்பு விழா, 10 மற்றும் பிளஸ் 2ல் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "லேப்டாப்' வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்ப முதன்மை செயலர் டேவிதார் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன் வரவேற்றார். அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: நான் படித்த பள்ளியில் தமிழகத்தில் முதன்முதலாக இந்த வகுப்பறை துவங்கியிருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.மேலும் 6ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் வசதி இந்த கல்வி ஆண்டுக்குள் செய்து கொடுக்கப்படும், என்றார்.அமைச்சர் பூங்கோதை பேசியதாவது: ஒரே நோக்கத்தோடு இல்லாமல் மாற்றி யோசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இ -ஸ்மார்ட் வகுப்பறையை கொண்டு வந்தோம். முதற் கட்டமாக தமிழகத்தில், 100 பள்ளிகளில் "இ ஸ்மார்ட்' வகுப்பறை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கட்டப்பட்டு வரும் தொழில் நுட்ப பூங்கா இன்னும் இரண் டரை மாதத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் தரமான கல்வியை கற்று பயன்பெற அரசு இதுபோன்ற புதிய கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறது, என்றார். தலைமை ஆசிரியர் ராஜாராம் நன்றி கூறினார்.

 

0 comments: