‌த‌மி‌‌ழி‌ல் படி‌த்த மேலு‌ம் 2 பேரு‌க்கு அரசு வேலை

தமி‌ழ் வழியில் பயின்ற இருவருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணைகளை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கோவையில் நடைபெற்ற உலகத் தமி‌ழ்ச் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சர் கருணா‌நி‌தி தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வா‌ய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள். 
இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில், தமிழில் கல்வி பயின்ற சென்னையைச் சேர்ந்த பேதுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற அரசு குற்றத்துறை தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் நகல் பெருக்கியாளராக நியமனம் செ‌ய்யப்பட்டுள்ளார். அதற்கான பணிநியமன ஆணையினை 9.7.2010 அன்று முதலமைச்சர் கருணா‌நி‌தி நேரில் வழங்கினார்.
தமி‌ழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவா‌ய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதை மேலும் நிறைவேற்றும் வகையில் தமிழில் கல்வி பயின்ற சென்னையைச் சேர்ந்த ஏ.ரஜினி, புஷ்பமணி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற அரசு குற்றத்துறை தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்ற பணிநியமன ஆணைகளை இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிக‌ழ்வின்போது, சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பெ.குமரேசன், சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, தனிச் செயலர் குமரகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

 

0 comments: