"படைப்பாளிகளுக்கு சமூகப்பொறுப்பு தேவை':"ரெட்டச்சுழி' டைரக்டர் தாமிரா "அட்வைஸ்'

திருநெல்வேலி:"படைப்பாளிகளுக்கு சமூகப்பொறுப்புணர்வு தேவை' என பாளை. சேவியர் கல்லூரியில் நடந்த விழாவில் டைரக்டர் தாமிரா பேசினார்.பாளை. சேவியர் கல்லூரியில் காட்சித்தகவலியல் துறை சார்பில் மன்ற துவக்க விழா நடந்தது. மாணவர் திருநாவுக்கரசு வரவேற்றார். பேராசிரியர் புரு÷ஷாத்தமன் அறிமுகவுரை ஆற்றினார். சேவியர் கலைமனைகள் அதிபர் பிரிட்டோ வின்சென்ட், கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம், துணை முதல்வர் தாமஸ் புனிதன், துறைத்தலைவர் சேவியர் அந்தோணி, பேராசிரியர்கள் சாந்தி, சகாயபாபு உட்பட பலர் பேசினர்.

ரெட்டச்சுழி பட டைரக்டர் தாமிரா பேசும் போது, ""என் மாணவப்பருவத்தில் சேவியர் கல்லூரியில் படிக்க விரும்பினேன். தற்போது தான் இங்கு எனக்கு "இடம்' கிடைத்துள்ளது. கலை சார்ந்த ஆர்வம் உள்ளவர்கள் படைப்பாளியாக இருக்க முடியும். படைப்பாளிகளுக்கு சமூக பொறுப்புணர்வு தேவை. தன்னை சுற்றி வாழும் மக்களின் பிரச்னைகள், சூழ்நிலைகள், அவலங்கள், பண்பாடு சார்ந்த விஷயங்கள் குறித்து மண் சார்ந்த படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

பலருக்கு சமூகப்பொறுப்புணர்வு இருப்பதில்லை. போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், விவசாயிகள் குறித்து யாருக்கும் கவலையில்லை. அரசியல் இன்றி யாரும் இல்லை. பெண்கள் விடுதலை கல்வியில் தான் உள்ளது. டைரக்டர்கள் பாலச்சந்தர், பாரதிராஜாவை படத்தில் இயக்கியது மிகச்சிறந்த அனுபவம். இருவரிடம் இருந்து கற்ற விஷயங்களை அடுத்த படைப்புக்களில் வெளிப்படுத்துவேன். இங்கு சிறந்து விளங்கும் மாணவருக்கு என் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு தருவேன்'' என்றார்.மாணவ, மாணவிகள் கேட்ட சந்தேகங்களுக்கு டைரக்டர் தாமிரா பதில் கூறினார். மாணவர்கள் இயக்கிய 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன. பேராசிரியர் பெர்னார்டு சந்திரா மதிப்பீடு செய்தார்.முத்துபாலாஜி நன்றி கூறினார்.

 

0 comments: