மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி சாம்பியன்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. திருச்செங்கோடு செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாமக்கல் பளு தூக்கும் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடந்தது.  அதில் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.இ., டிரிபிள் இ படிக்கும் மாணவன் அனிஷ்குமார் 100 கிலோ எடைப்பிரிவில் முதல் இடத்தையும், அதே பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஜார்ஜ்ஸ்டீபன் 85 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தையும், தயாநிதி 69 கிலோ எடைப்பிரிவில் முதல் இடமும் பிடித்துள்ளனர்.

மேலும், நான்காம் ஆண்டு பி.இ., டிரிபிள் இ படிக்கும் மாணவன் ஜெயரிச் 77 கிலோ எடைப் பரிவில் இரண்டாம் இடமும், அதே பிரிவில் படிக்கும் ஜெகதீஸ் என்ற மாணவர் 94 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடமும் பிடித்தனர். அதில் மாணவர் அனிஷ்குமார் ஸ்டராங்மென் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இவ்வெற்றி மூலம் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி 164 புள்ளி பெற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தள்ளது.  வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் டாக்டர் செல்வராஜ், செயலாளர் கவித்ரா நந்தினிபாபு, முதல்வர் கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

 

0 comments: