"எதிர்காலத்துக்கு பெற்றோர் பங்கு அதிகம்': மாணவர்களுக்கு துணைவேந்தர் அறிவுரை

VC's Imageதிருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை வணிகவியல் மற்றும் நிதிக்கல்வித்துறை சார்பில், பெற்றோர், ஆசிரியர், முன்னாள் மாணவர் மற்றும் புதுமுக மாணவர் சந்திப்புக் கூட்டம் நடந்தது.

இந்தாண்டுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டு துணைவேந்தர் மீனா பேசியதாவது: தரம் வாய்ந்த பாடப்புத்தகத் தை வெளியிட்ட துறைத்தலைவர் செல்வம் பாராட்டுக்குரியவர். மாணவர்களின் திறன் மேம்பாடு, ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம், வேலைவாய்ப்புக்கான ஏற்பாடு என்று துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றன. இப்பாடத் திட்டத்தை பயில்வதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு பெறலாம். மாணவர்களின் எதிர்காலத்தை பொறுத்தவரை, மாணவருக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோருடைய பங்கு அதிகம். இத்துறையின் பலமான முன்னாள் மாணவர்களின் அனுபவத்தை கொண்டு, புதுமுக மாணவர் சிறப்பாக கல்வி கற்கலாம். தொழிற்சாலை, கல்விநிறுவனம், இவையிரண்டும் இணைக்கின்ற ஓர் புள்ளி ஆகியன வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

 

0 comments: