கல்வி கற்க ஆர்வம் இருந்தும், பண வசதியில்லை என்றால் " வெளிச்சம் " உதவுகிற்து.

சேலம்: சேலத்தில் ஏழை, எளிய மாணவர்கள் பட்டப்படிப்பு முடிக்காத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவி காரம் நீட்டும் வகையில் "வெளிச்சம் மாணவர்கள்' குழு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

"வெளிச்சம் மாணவர்கள்' குழுவினர் வாகனம் மூலம் ஒவ்வொரு கிராம பகுதியாக சென்று ஏழை, எளிய மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க தேவையான கல்வி கட்டண உதவியை பெற்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கற்க வழி இல்லாத ஏழை மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து துவங்கிய, "வெளிச்சம் மாணவர்கள்' குழுவினர் கடந்த 14 நாட்களில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று, "வெளிச்சம் மாணவர்கள்' கல்வி உதவி தொகை ஏழை மாணவர்களுக்கு பெற்று தரும் பிரச்சாரத்தை துவக்கினர். பெரியார் பல்கலை பதிவாளர் சேதுகுணசேகரன் கொடி அசைத்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். "வெளிச்சம் மாணவர்கள்' குழு மாநில ஓங்கிணைப்பாளர் ஆனந்த்குமார் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

வெளிச்சம் மாணவர்கள் குழு மூலம் முதல்கட்டமாக 486 மாணவ, மாணவியருக்கு கல்வி தொகை பெற்று கொடுத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏழை, எளிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு செல்வந்தர்கள், தன்னார்வ அமைப்பு, சங்கங்கள் மூலமாக கல்வி கடனை பெற்று கொடுப்பதை வெளிச்சம் மாணவர்கள் குழு நோக்கமாக செயல்பட்டு வருகிறது.வெளிச்சம் மாணவர்கள் குழுவின் மூலம் பயன் அடைந்த 486 பேரில் 86 பேர் இன்ஜினியரிங் பட்டபடிப்பு படித்து வருகின்றனர். 11 பேர் டாக்டருக்கும், 36 பேர் ஆசிரியர் கல்வியியல் படிப்பும், 22 பேர் வக்கீலுக்கும் மற்றவர்கள் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் சேர்ந்து கல்லூரியில் படித்து வருகின்றனர்.

ஓமனில் இளநிலை விஞ்ஞானியாக பணியாற்றி வரும் செந்தில் என்பவர் "வெளிச்சம் மாணவர்கள்' குழு மூலம் கல்வி உதவி பெற்ற உயர் நிலையில் உள்ளார்.இதேபோல, அடுத்த தலைமுறையில் உள்ள கல்வி கற்க வசதி இல்லாத மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி கடன், கல்வி கட்டணம் செலுத்த முடியாதவர்களை கண்டறிந்து வெளிச்சம் மாணவர்கள் குழுவினர் உதவிடும் வகையில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளனர். ஏழை மாணவர்கள் கல்வி கற்க ஆர்வம் இருந்தும், பண வசதியில்லை என்றால் மொபைல் நம்பர் : 96981 51515 தொடர்பு கொண்டு பிரச்னை தீர வழி தேடலாம்.

 

0 comments: