பண்ணாரி அம்மன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் மற்றும் சில சலுகைகளையும் பெற முடியும். பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களுக்கென பிரத்யேக நிதியுதவி செய்யும் வங்கியாக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா செயல்படும். இந்த கல்விக்கடன் வசதியை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவானது பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த கடன் வசதியை கல்லூரியிலும் மற்றும் வங்கியின் கிளைகளில் இருந்தும் பெற்றக் கொள்ளலாம். மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து கடன் வசதி சம்பந்தமான அனைத்துவித விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்பிய ஏழு நாட்களுக்குள் அவர்கள் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை வங்கி பரிசீலனை செய்யும்.

கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் சேர்மன் பாலசுப்ரமணியம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கோவை மாவட்ட பொது மேலாளர் கண்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

0 comments: