தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் செய்முறை பயிற்சி முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் செய்முறை பயிற்சி முகாம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. பயிற்சி முகாமுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.  கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஞ்சுநாயர் அறிமுக உரையாற்றினார். முகாமில் புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேந்திரன் இயற்பியல் செய்முறை குறித்து பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆலோசகர் ராமமீனாட்சி, முதல்வர் அனுஷாபாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக பேராசிரியர் சரண்யா வரவேற்றார். துறை தலைவர் அத்துல்யாநாயர் நன்றி கூறினார்.

 

0 comments: