இளைஞர் விழிப்புணர்வுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு

அரியலூர், ஜூலை 29: தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட விளையாட்டு ஆணையம் ஆகியன இணைந்து நடத்திய இளைஞர் கலை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு அண்மையில் பரிசுகள் அளிக்கப்பட்டன.


    விழாவுக்குத் தலைமை வகித்து போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் பேசியது:

எய்ட்ஸ் என்ற உயிர்க்  கொல்லி நோய் தொடர்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நோய் ஊசி மூலம் 10 சதம், தகாத- பாதுகாப்பற்ற உறவு மூலம் 90 சதமும் தொற்றுகிறது. எனவே, அனைவரும் விழிப்புணர்வுடனும், மனக் கட்டுப்பாட்டுடனும் இருப்பது அவசியம் என்றார் அவர்.

   நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு, தடுப்புத் திட்ட மேலாளர் கே. இளங்கோவன், வட்டாட்சியர் ஆர். கோவிந்தராஜுலு, ஹாக்கி பயிற்சியாளர் கே. லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

0 comments: