வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில்நுட்ப வார விழா

தருமபுரி, ஜூலை 27: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில்நுட்ப வார விழா ஜூலை 29-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 இதுகுறித்து பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் ப. ஸ்ரீதர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகள், கருத்தரங்கம், படக்காட்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 7 நாள்கள் தொழில்நுட்ப வார விழா நடைபெறுகிறது.

 விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேச பூபதி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக மண்டல திட்ட இயக்குநர் பிரபு குமார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன்,  மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

 விழாவில் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அவர் கூறியுள்ளார்

 

0 comments: