சென்னை பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, ஜூலை 29: சென்னை பல்கலைக்கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூலை 31) நடைபெறவுள்ளது.

இதில் தகுதியுடைய 300 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகமும், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனமும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

இதில் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.

மேலும் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர்களின் நலுனுக்காக இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம் தெரிவித்தார்.

இதுகுறித்த விவரங்களுக்கு 044 - 25399418, 25399518, 25392255 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்

 

0 comments: