பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஆர்.எம்.கே. கல்விக் குழுமம் புதிய ஒப்பந்தம்

சென்னை, ஜூலை 29: மாணவர்களின் தொடர்பு கொள்ளும் திறனை வளர்ப்பதற்காக ஆர்.எம்.கே. கல்விக் குழுமம், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


மாணவர்கள், தங்களது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ளவும், வணிக ரீதியிலான திறமைகளை வெளிக்கொண்டு வரவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, "பிசினஸ் இங்கிலிஷ்' எனும் சான்றிதழ் படிப்பு ஆர்.எம்.கே குழுமத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது.

இதற்காக, ஆர்.எம்.கே. குழுமத்தை சேர்ந்த கல்லூரிகளிலிருந்து பிசினஸ் இங்கிலிஷ் பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம் இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதனையடுத்து, பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் தேர்வை எழுதி மாணவர்கள் இதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் மிகவும் முக்கியமாக விளங்கும் மென்திறன்களை பெறுவதற்கும், வணிக ரீதியிலான கருத்தரங்குகளில் சிறப்பாக பங்காற்றுவதற்கும் இப்பயிற்சிகள் பெரிதும் பயன்படும்

 

0 comments: