இசைக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம்

carnatic music trinitiesசென்னை : "பிருகத்வனி' சங்கீத நிறுவனமும், கலிபர் பள்ளியும் இணைந்து, இசைக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளன.கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை சான்றிதழைப் பெறும் வகையில், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகியோர் பங்கேற்றனர்.மாணவர்களை வாழ்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது, "மாணவர்களுக்கு சங்கீதத்துடன், இங்கிதமும் கற்றுத் தர வேண்டுமென' ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார். நாட்டியத்தில் சங்கீதத்தின் முக்கியத்துவம் குறித்து வைஜெயந்திமாலா பாலி விளக்கிப் பேசினார்.கலிபர் அகடமியின் தாளாளர் மதுவந்தி அருண் பேசும்போது, "இசை என்பது இதர பாடமாக அல்லாமல், பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏழாம் வகுப்பு முதல் கற்றுத் தரப்படும். மற்ற பாடத்துடன் இசைப் பயிற்சி ஒருங்கிணைந்து கற்றுத் தரப்படும்' என்றார்.நிகழ்ச்சியில் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும் போது, "பள்ளிகளில் முதல் முறையாக நடக்கும் இந்த புதிய முயற்சி, அனைவரையும் சென்றடைய வேண்டும்' என்றார்."பிருகத்வனி' சங்கீத நிறுவனத்தின் மேலாளர் அனில் சீனிவாசன் பேசும் போது, "புதுமையான கல்வியை அறிமுகப்படுத்துவதில், கலிபர் அகடமி பெயர் பெற்றது. இந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.

 

0 comments: