அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிப்பு ஒன்றுதான்:அமைச்சர் பொன்முடி அறிவுரை

விக்கிரவாண்டி:முண்டியம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது. கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கை அனுமதி சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் 80 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை அனுமதி உத்தரவை வழங்கி அமைச் சர் பொன்முடி பேசியதாவது:
மருத்துவ கல்லூரி இங்கு அமைவதற்கு பெருமுயற்சி எடுத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் தான் சேர்ந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் இங்கு சேர்ந் துள்ளார்கள். கல்லூரி மாவட்ட மக் களுக்கு பயன்படுவதைவிட, மருத் துவமனை மூலம் தான் விழுப்புரம் மாவட்ட மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள்.மருத்துவ கல்லூரி இங்கு அமைய வேண்டும் என அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் பல பேர், அமையகூடாது என எதிர்த்தவர்கள் சில பேர். இதில் பல பேரின் எண் ணங் கள் வெற்றி பெற்று நீங்கள் இன்று இங்கு சேர்ந்துள்ளீர்கள். இந்த கல்லூரியில் உள்ளதை விட மற்ற கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் இருக்கலாம். அந்த கல்லூரியிலும் இங்குள்ள பேராசிரியர்கள் போன்றுதான் கல்வியை கற்று தருவார்கள். இதில் படிப்பு எல்லாம் ஒன்றுதான். 
நீங்கள் படிப்பதற்காக முதல்வர் கருணாநிதி எடுத்துக்கொண்ட பெரிய முயற்சியால்தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுள் ளீர்கள். நீங்கள் இந்த கல்லூரியில் படித்து முடிப்பதற்குள் இங்கு பட்ட மேற்படிப்புகள் வர வாய்ப்புள்ளது. உங்களது படிப்புகளை நன்றாக படித்து முடித்து, இந்த கல்லூரியில் மேற்படிப்புகளை தொடர வாழ்த்துகிறேன்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.விழாவில் மருத்துவ கல்லூரி நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகரன், நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் புகழேந்தி, கான்ட்ராக்டர்கள் திருசங்கு, தங்கவேல், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

0 comments: