கல்விக்கடன்

அனைவருக்கும் வணக்கம்.

கல்விக்கடன் பற்றிய அனைத்து விளக்கங்களும் www.eltf.co.cc என்கிற
எங்களது இணைய தளத்தில் உள்ளன. தேவையானவர்கள், அந்த தளத்திலிருந்து
தகவல்களை பெறலாம். எந்த வங்கியாவது விதிமுறைகளை மீறினாலோ அல்லது அதிக
மார்க் வாங்கிய ஏழை மாணவர்களுக்கு அநீதி இழைக்க்ப்பட்டாலோ அல்லது இணைய
தளத்தில் இல்லாத வேறு விளக்கங்கள் தேவைப்பட்டாலோ, எங்களுக்கு இமெயில்
மூலம் action2020eltf@gmail.com என்கிற முகவரிக்கு எழுதலாம்.
எங்களுக்கு மெயில் அனுப்பினால், 24 மணி நேரத்தில், உங்களூக்கு பதில்
கிடைக்கும்.
இந்த சேவையில் ஈடுபடும் அனைவரும், பல தொழில்களில் இருப்பதாலும், இதை ஒரு
சமூக பணியாக செய்வதாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம்.
இமெயிலில் விவரங்கள் அனுப்பினால் போதும். தேவைப்பட்டால்,  நாங்களே
சம்பந்தப்ட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வோம்.
குறிப்பாக அதிக மார்க் வாங்கியுள்ள பரம் ஏழை மாணவர்களூக்கு (ஜாதி
மதங்களுக்கு அப்பாற்பட்டு) அநீதி இழைக்கப்பட்டால், எங்களூக்கு
எழுதுங்கள். இணைந்து நீதி கிடைக்க பாடுபடுவோம்.

அன்புடன்

இந்தியா விஷன் 2020 , Education Loan Task Force அமைப்புக்களின் நிறுவனர் K.ஸ்ரீநிவாசன்

இன்றைய செய்திகள்





Aug 31, 2010
மதுரை, ஆக. 30: பசி போக்கும் மக்கள் இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.÷ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் 52-வது ஆண்டு விழாவில் நடைபெற்ற அமரர் பன்மொழிப் புலவர்...

பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவருக்கு அரிய வாய்ப்பு


Aug 31, 2010
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் 2002 வரை 4 ஆண்டுகள் பொறியியல் படிப்பில் மாணவர்கள் படித்தனர். இதில் முழுநேர, பகுதிநேர படிப்பு மாணவர்களில், இதுவரை தேர்வு பெறாத பாடங்களை மீண்டும் எழுத வாய்ப்பு...
சென்னை : அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 273 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங், சென்னை சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்...

பிளாஸ்டிக் பத்து ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட முடிவு


Aug 31, 2010
கொச்சி: பத்து ரூபாய் காகித நோட்டுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கால் ஆன ரூபாயை புழக்கத்தில் விட்டு பொதுமக்களின் கருத்துக்களை அறிய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பத்து ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள்...

2,000 ஆண்டு தொன்மை வாய்ந்த மலையாளம் : செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது


Aug 31, 2010
திருவனந்தபுரம் : மலையாள மொழியானது, செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது, 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க, குறைந்தது 1,500 ஆண்டுகள்...

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் படிக்க...


Aug 31, 2010
ஜெர்மனி:சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவனில் ஜெர்மன் அகாதெமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் அமைப்பின் பிரிவு செயல்படுகிறது. ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து...

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை


Aug 31, 2010
கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து...

சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும்: பொள்ளாச்சி என். மகாலிங்கம்


Aug 31, 2010
சென்னை, ஆக.30: சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும் என தொழிலதிபர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தெரிவித்தார்.பொள்ளாச்சி என். மகாலிங்கம் எழுதிய "வள்ளலாரின் வாழ்க்கையும், லட்சியங்களும்' ​,...

திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு


Aug 31, 2010
சென்னை, ஆக. 30: திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு, குமாரராஜா மு.அ.மு. முத்தையா செட்டியாரின் 82-வது பிறந்தநாள் நினைவுப் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு...

குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே: தினமணி ஆசிரியர்


Aug 31, 2010
ராஜபாளையம், ஆக. 30: குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் குறிப்பிட்டார்.ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்...

திருமண வரவேற்பில் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் பரிசு


Aug 31, 2010
சென்னை, ஆக. 30: சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.பொதுவாக, திருமண நிகழ்ச்சிகளிலும், வரவேற்பு...

அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி: அமைச்சர் பூங்கோதை


Aug 31, 2010
கோவை, ஆக.30: தமிழகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி பெறுகின்றன என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறினார்.தென்னிந்திய அளவிலான காருண்யா இவாஞ்சலின் நினைவு கோப்பைக்கான...

நேற்றைய செய்திகள்




தலைமை ஆசிரியர்களாக 273 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை : அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 273 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங், சென்னை சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, பணி மூப்பு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். காலையில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் 143 பேருக்கும், பிற்பகலில் நடந்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் 130 பேருக்கும் பதவி உயர்வு ஆணைகளை இயக்குனர் பெருமாள்சாமி வழங்கினார். மேலும், 87 பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவருக்கு அரிய வாய்ப்பு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் 2002 வரை 4 ஆண்டுகள் பொறியியல் படிப்பில் மாணவர்கள் படித்தனர். இதில் முழுநேர, பகுதிநேர படிப்பு மாணவர்களில், இதுவரை தேர்வு பெறாத பாடங்களை மீண்டும் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1993 வரை படித்த மாணவர்கள் சிறப்பு கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பாடங்களுக்கான தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டும். கடந்த 1994 முதல் 2002 வரை படித்த மாணவர்கள் 7 ஆயிரம் ரூபாய் மற்றும் பாடங்களுக்கான தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை, "www.mkuniversity.org/forms/html' மூலம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, செப். 24ம் தேதி வரை அனுப்பலாம். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். ""இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என தேர்வாணையர் ராஜ்யக்கொடி தெரிவித்துள்ளார்

பிளாஸ்டிக் பத்து ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட முடிவு

கொச்சி: பத்து ரூபாய் காகித நோட்டுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கால் ஆன ரூபாயை புழக்கத்தில் விட்டு பொதுமக்களின் கருத்துக்களை அறிய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பத்து ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள் தற்போது காகிதத்தில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இந்நோட்டுக்கள் விரைவில் அழுக்காகி, நைந்து கிழிந்து விடுகின்றன. எனவே, பிளாஸ்டிக்கால் ஆன பத்து ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட, ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. நடப்பாண்டிலேயே இதை சோதித்து பார்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிழிந்தது உட்பட பலவகை குறைபாடுகளுடன் கூடிய 13 ஆயிரத்து 72 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதிவிரைவில் சேதமடையக் கூடியவைகளாக இருப்பவை, 5, 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள் தான். பத்து ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி அதற்கு பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பை பொறுத்து, பிற இலக்கங்களிலும் அவ்வகை நோட்டுக்களை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசிக்கும். தற்போது சில வெளிநாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன.

2,000 ஆண்டு தொன்மை வாய்ந்த மலையாளம் : செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது

திருவனந்தபுரம் : மலையாள மொழியானது, செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது, 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க, குறைந்தது 1,500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாக, அம்மொழி இருக்க வேண்டுமென்பது, மத்திய அரசின் விதி. மாநில மொழிகளில் செம்மொழி அந்தஸ்துக்கு உரிய மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கி செலவிடுகிறது. மத்திய அரசு அங்கீகரித்த செம்மொழி அந்தஸ்துக்குரிய மொழிகளாக தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் உள்ளது. அதேபோல், தொன்மை வாய்ந்த மலையாள மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைக்க, கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. டாக்டர் புதுச்சேரி ராமச்சந்திரன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளராக, டாக்டர் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் செயல்படுகிறார்.

இக்கமிட்டியின் அயராத பணி காரணமாக, மலையாள மொழி குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அறிவியல் பூர்வமாக லிபி எழுத்து வடிவங்களின் நிபுணரான டாக்டர். ஐராவதம் மகாதேவன், சமீபத்தில் இக்கமிட்டியிடம் அளித்துள்ள தகவல்கள் தான் முக்கியத்துவத்தை அளித்துள்ளது. தமிழக தேனி மாவட்டத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்களில், கி.பி., 2ம் நூற்றாண்டிலே மலையாள மொழி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அங்கு கிடைத்தவற்றில், "பெடு' என்ற வார்த்தை (இறந்து கீழே விழுந்த) மலையாள மொழியை சேர்ந்தது. தமிழில் இதே வார்த்தை, "படு' என அழைக்கப்பட்டது. "தீயன்' என்ற வார்த்தையும், மலையாள மொழியைத் தவிர, பிற மொழிகளில் காணப்படாதது. இதுபோல் எடக்கல், பட்டணம் ஆகிய பகுதிகளில் இருந்தும், பல்வேறு தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த சாசனங்களில் பலப்புலி தாந்தகாரி (பல புலிகளை கொன்றவன்) என்பதும் மலையாள மொழி. இது 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது இலக்கிய, இலக்கண ரீதியாகவும், அக்காலத்தில் வாழ்ந்த குடிமக்கள் குறித்த ஆதாரங்களை நோக்கமாக கொண்டு கமிட்டி தொடர்ந்து முயற்சிக்கிறது.

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் படிக்க...

ஜெர்மனி:


சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவனில் ஜெர்மன் அகாதெமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் அமைப்பின் பிரிவு செயல்படுகிறது. ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இ-மெயில்: daadch@vsnl.in

ஜெர்மன் கல்வி குறித்து விவரங்கள் அறிய உதவும் இணைய தளங்கள்:

www.campus-germany.de
www.daad.de
www.higher-education-campass.de
www.gateway-to-germany.de
www.student-affairs.de


ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படிப்பது குறித்து விவரங்கள் அறிய:

IDP Education Australia
28, Crystal Lawn, Wallace Garden
20, Haddows Road I Street
Nungambakkam, Chennai 600 006.
E-mail:info@chennai.idp.edu.au

ஆஸ்திரேலியக் கல்வி நிறுவனங்கள் குறித்த விவரங்களைக் கீழ்க்கண்ட இணைய தளம் மூலமும் அறியலாம்:

www.idp.com

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை

கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மீண்டும் சீற்றம் அடைந்துள்ளது.
திங்கள்கிழமை இரண்டாவது நாளாக எரிமலை தீக்குழம்பை கக்கியது. இதனால் அப்பகுதியை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், எரிமலையின் அடிவாரத்தில் வசித்து வந்த மக்களும் அவசரமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்றளவு வரை அபாயமான பகுதியாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனே வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஏற்படுத்தியுள்ள தாற்காலிக முகாம்களில் அடைக்கலம் அடைய தொடங்கியுள்ளனர். இதுவரை 3000 பேர் முகாம்களை வந்தடைந்துள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எரிமலை சீற்றத்தால் 2,400 மீட்டர் உயரம் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் அதிக அனலாகவும் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக விமானங்கள் செல்ல வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எரிமலை சீற்றத்தை பார்ப்பதற்கே பயமாக இருப்பதாகவும், எரிமலை புகை கலந்த காற்று சுவாசிப்பதற்கு நெடியுடையதாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1600-க்குப் பிறகு... சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சினாபங் எரிமலை கடந்த 1600-ம் ஆண்டு சீற்றம் கொண்டது. இதையடுத்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சீற்றமிக எரிமலை பட்டியலில் சினாபங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் மொத்தம் 69 சீற்றமிகு எரிமலைகள் உள்ளன

பசிபோக்கும் மக்கள் இலக்கியம் மணிமேகலை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

மதுரை, ஆக. 30: பசி போக்கும் மக்கள் இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.

÷ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் 52-வது ஆண்டு விழாவில் நடைபெற்ற அமரர் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் நினைவு சொற்பொழிவு நிகழ்வில், மணிமேகலை மக்கள் இலக்கியம் எனும் பொருளில் அவர்
ஆற்றிய உரை:
÷சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இரட்டைக் காப்பியங்கள்தான். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தொடர்ச்சியான சம்பவங்களைக் கொண்டிருப்பதாலும், சிலம்பில் கூறப்பட்ட சில செய்திகள் மணிமேகலையிலும் வருவதாலும் அவை இரட்டைக் காப்பியமாகத் திகழ்கின்றன.
÷ஆனால், அவை சமகாலத்து இலக்கியங்களா என்பதை ஆராய வேண்டும் என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறியதை கவனத்தில் கொள்வது அவசியமானது.
÷இப்போது தமிழ் கற்க வருவோர், தேர்வில் தேறினால் போதும் என்ற நிலையிலேயே வருகின்றனர். ஆய்வு நோக்கில் அவர்கள் தமிழைக் கற்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற ஆய்வுகளில் மாணவர்கள் அதிக நாட்டம் செலுத்துவதில்லை.
÷சிலம்பில் கூறப்படாத பல தகவல்கள் மணிமேகலையில் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆசிரியப்பா கவிதை எழுத ஆசைப்படுவோர் மணிமேகலை படிக்க வேண்டும்.
÷தமிழ் இலக்கியத்தில் இலக்கிய மொழி, பேச்சு மொழி என இரு வகை உண்டு. நகைச்சுவை என்பது வழக்கு மொழியான பேச்சு மொழியில்தான் வரும். அத்தகைய பேச்சு மொழியை புரிந்துகொள்வதுபோல மணிமேகலையின் நடை அமைந்திருப்பதைக் காணலாம்.
÷மணிமேகலையில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது குறித்து குறிப்பிடப்படுகிறது. அதேபோல வறுமையைப் போக்க வேண்டும் என எழுதப்பட்ட முதல் காப்பியமாகவும் அது திகழ்கிறது. பட்டிமன்றம் என்ற சொல்லே மணிமேகலையில்தான் முதன்முதலில் காணப்படுகிறது.
÷மணிமேகலையில் அரசாட்சி பற்றிக் குறிப்பிடும்போது, மன்னன் செங்கோல் வளைந்தால், விண்ணில் கோள்கள் வளையும் எனக் கூறப்படுகிறது. அப்படி விண்கோள் வளைந்தால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். பஞ்சம், பட்டினி ஏற்பட்டால் மன்னன் ஆட்சி நிலைக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இன்றைக்கும், என்றைக்கும் பொருந்தும்.
÷சிலப்பதிகாரத்தின் சிறப்பு, அது சாமானியரைக் கதாபாத்திரங்களாக்கிய காப்பியம் என்பதுதான். கடவுளர்களையும், அரச குடும்பத்தினரையும் மையப்படுத்தாமல், வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்களைக் கதைத் தலைவனாகவும், தலைவியாகவும் கொண்ட சிலம்பு தனிப் பெருமை பெறுகிறது.
÷மணிமேகலை மேலும் ஒரு படி மேலே போய், கணிகை குலத்தைச் சேர்ந்த பெண்ணைக் காவியத் தலைவியாக்கி, பசியைப் போக்கும் உன்னதச் செயலை மனித நெறியாக்கி உயர்ந்து நிற்கிறது.
÷நிலையாமை, மறுபிறப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல கருத்துகளை எடுத்துக்கூறும் அற்புத இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது. ÷காப்பியங்கள் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கும்போதுதான் அவை இறவாமல் இருக்கின்றன.
÷பசி போக்கும் மக்கள் இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது. வந்தாரை வரவேற்று உணவு தரும் தமிழர் பண்பாட்டை வலியுறுத்தும் காப்பியமாகவும் மணிமேகலை திகழ்கிறது என்றார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
÷சமகாலத்து இலக்கியங்களா?  
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது:
÷சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், அவை சமகாலத்து இலக்கியங்களா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்வது அவசியம்.
÷ஏனெனில், சிலப்பதிகாரத்தில் சீத்தலைச் சாத்தனார் அவையில் அமர்ந்திருக்க, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றியதாகப் பாயிரத்தில் கூறப்பட்டுள்ளது.÷சிலப்பதிகாரத்தின்படி காவிரிப்பூம்பட்டினம் செல்வச் செழிப்போடு சோழ நாட்டின் பெருமைமிக்க வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
÷மணிமேகலையின் பாயிரத்திலும், இளங்கோவடிகள் முன்னிலை வகிக்க, மதுரை கூலவாணிகன் சாத்தன் அந்த நூலை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.
÷மணிமேகலைப்படி பூம்புகார்ப் பட்டினத்தைக் கடல்கோள் கொண்டுவிட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது.
÷கடல்கோள் கொண்டதற்கு முன்னால் உள்ள காப்பியமாக சிலப்பதிகாரமும், புகார் நகரம் கடல் கொண்ட பிறகு எழுதப்பட்ட காப்பியமாக மணிமேகலையும் இருக்கும்போது, அவை நிச்சயமாக ஒரே நேரத்தில் எழுதப்பட்டவை அல்ல.
÷சிலப்பதிகாரத்தின் பாயிரத்தில் குறிப்பிடப்படும் சாத்தனும், மணிமேகலை ஆசிரியர் சாத்தனும் வெவ்வேறு புலவர்களாக இருக்கக்கூடும்.
÷நான் தமிழறிஞனல்ல. இலக்கிய ரசிகன் மட்டுமே. ஒன்பது உலகத் தமிழ் மாநாடு நடத்திவிட்டோம். ஓர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்திவிட்டோம். பல பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆய்வுகள் நடத்திவிட்டோம். ஐயம் திரிபுற சிலம்பும் மேகலையும் வெவ்வேறு காலத்தவையா இல்லையா என்று இன்னும் தெளிவுபடுத்தாமல் இருக்கிறோமே, ஏன் என்பதுதான் எனது கேள்வி.
÷வயிற்றுக்குச் சோறிடல்வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என பாரதி கூறினான். இதை மணிமேகலை காவியமாக வலியுறுத்தி இருக்கிறது. பசியைப் போக்குவதுதான் தலைசிறந்த அறம் என்று இந்திய சமுதாயமும் தொன்றுதொட்டு வலியுறுத்தி வருவதற்கு மணிமேகலை ஒன்றுபோதும் சான்று பகர என்றார் அவர்.

சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும்: பொள்ளாச்சி என். மகாலிங்கம்

சென்னை, ஆக.30: சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும் என தொழிலதிபர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தெரிவித்தார்.
பொள்ளாச்சி என். மகாலிங்கம் எழுதிய "வள்ளலாரின் வாழ்க்கையும், லட்சியங்களும்' ​, கே.பி. சிவகுமார் எழுதிய "மாற்றம்' ஆகிய ஆங்கில நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதில் பொள்ளாச்சி என். மகாலிங்கம் பேசியதாவது:
வள்ளலாரின் வாழ்க்கை முறைகளை கூறியுள்ள இந்த நூல்கள், மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். நான் வள்ளலாரின் கொள்கைகளை 1954-ம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறேன்.
மனிதர்கள் எவ்வாறு தங்களின் உடலையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது குறித்த பல அரிய தகவல்களை எளிய முறையில் வள்ளலார் நமக்குக் கூறியுள்ளார்.
வள்ளலாரின் உயரிய கருத்துகளை உலக மக்களிடையே பரப்புவதற்காக அவர் எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பது அவசியம். இந்தப் பணிகளுக்காக சென்னையில் மொழியியல் ஆய்வு மையத்தை நிறுவ வேண்டும்.
இந்த மையத்தை நிறுவ நான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்களின் ஒத்துழைப்பு இதற்கு அவசியம் என்றார் அவர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜன், அருள்ஜோதி சங்கத்தின் செயலாளர் சோமசுந்தரம், நாரதகான சபா செயலாளர் ஆர். கிருஷ்ணசாமி, நூலாசிரியர் கே.பி. சிவகுமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு

சென்னை, ஆக. 30: திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு, குமாரராஜா மு.அ.மு. முத்தையா செட்டியாரின் 82-வது பிறந்தநாள் நினைவுப் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் சென்னையில் (அண்ணா மேம்பாலம் அருகே) ராணி சீதை மன்றத்தில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில், இந்த ஆண்டுக்கான பரிசை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் வழங்க உள்ளார்.
÷மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகச் சிறப்பாகப் பணியாற்றுவதற்காக திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தில் இயங்கி வரும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக் கூடத்துக்கு இந்தப் பரிசு வழங்கப்பட உள்ளது.
காது கேளாத, வாய் பேச இயலாத மாணவர்களுக்காக இலவசமாக நடத்தப்படும் இந்த மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் கே. முருகசாமி இநதப் பரிசைப் பெறுகிறார். 1989 முதல் 1992 வரை தேசிய கால்பந்தாட்ட வீரராக விளங்கிய இவரும் காது கேளாத, வாய் பேச இயலாதவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தப் பள்ளியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு திருப்பூரில் இயங்கும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.
இந்த விழாவில், அறக்கட்டளை சார்பில் 10 பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
பேராசிரியர் மு. இராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், அறக்கட்டளையின் புரவலருமான டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி, அறக்கட்டளையின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, அறக்கட்டளையின் கெüரவ செயலர் ஆறு. ராமசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றன

குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே: தினமணி ஆசிரியர்

old photo
ராஜபாளையம், ஆக. 30: குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் குறிப்பிட்டார்.
ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதி மாணவர் இலக்கிய மன்ற விழாவில் தலைமை வகித்து மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது:
இப்போது நாம் படிப்பது அதிக மதிப்பெண் எடுத்து, அதன் மூலம் மேற்படிப்பு படித்து வேலைக்குப் போகவேண்டும், அதன் மூலம் நிறையப் பணம் சம்பாதித்து பெரும் தனவந்தராக மாறவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதுவே சந்தோஷமான வாழ்க்கை என்றும் நினைக்கிறோம்.
பணம் மட்டுமே சம்பாதித்து விட்டால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்பட்டுவிடாது. மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை. பகிர்ந்து கொள்ளும் உணர்வில்தான் இருக்கிறது. மற்றவர்களை நேசிப்பதில் இருக்கிறது. இயற்கையை ரசிப்பதில் இருக்கிறது. இதைக் குழந்தைகள் உணரவேண்டும். இதைப் பெற்றோரும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் படிப்பதும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதும்தான் பெருமை என்ற உணர்வு பெற்றோரிடம் உள்ளது. ஆனால், வெற்றி பெற்ற மனிதர்கள் படித்தது எல்லாம் பெரிய பட்டணத்தில் அல்ல.
அண்ணல் காந்தியடிகள், ராஜாஜி, அண்ணா, அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவருமே சிறிய கிராமங்களில் படித்தவர்கள்தான்.
ராஜபாளையம் நகருக்கு பெருமைத் தேடித்தந்த சென்னை ராஜதானியின் முன்னாள் முதல்வர் குமாரசாமிராஜா பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவரா? இல்லை, காமராஜர்தான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தாரா?
ஆனால், தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் படித்து சாதனை படைத்துள்ளனர். உலக வரைபடத்தில் உங்களால் ராஜபாளையம் இடம்பெற வேண்டும். அதுவே நீங்கள் பிறந்த மண்ணுக்குச் செய்யும் கடமை.
எல்லா பெற்றோருக்கும் தத்தமது குழந்தைகளுக்கு நல்லாசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருக்கிறது. ஆனால், தங்களது குழந்தைகளை ஆசிரியராக்க மட்டும் யாரும் தயாராக இல்லை.
ஏதாவது ஒரு பெற்றோர் எனது மகனை ஓர் ஆசிரியராக்கப் போகிறேன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமா? அப்படி நினைத்தால் எப்படி எதிர்காலத்தில் நல்லாசிரியர்கள் உருவாக முடியும்?
உங்களில் பலர் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.
முடிந்தால் நீங்கள் சரித்திரம் படைத்து பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமைத் தேடிக் கொடுங்கள். இல்லாவிட்டால் ஆசிரியர்களாக மாறி சாதனையாளர்களை உருவாக்கிப் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேருங்கள் என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் கவிஞர் ரா.ஆனந்தி, தலைமை ஆசிரியை ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
மாணவியர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மரங்கள் உள்ளிட்ட இயற்கை குறித்து மாணவ, மாணவியர் பேசினர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் எம்.ஏ.வெங்கடப்பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்

திருமண வரவேற்பில் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் பரிசு

சென்னை, ஆக. 30: சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

பொதுவாக, திருமண நிகழ்ச்சிகளிலும், வரவேற்பு விழாக்களிலும் கலந்து கொண்டவர்களுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவையே வழங்கப்படும். தமிழக கலாசாரத்தில் பரம்பரை, பரம்பரையாக தொடர்ந்து வரும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.
ஆனால், காந்தியின் சுயசரிதை புத்தங்களை வழங்கி, அதைப் பெற்றவர்களை மட்டுமல்லாமல் அதைப் பற்றி கேள்விப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பெ. வடிவேல். இவரது மனைவி பத்மா.
இவர்களது மகள் அனிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்தான் தேசியத்தின் மணம் வீசியது.
இது குறித்து மணமகளின் தந்தை பெ. வடிவேல் கூறியதாவது:
இப்போது இருக்கும் சிறுவர், சிறுமிகள் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியை பற்றி அறிந்து கொள்வதற்காகவே இந்த புதிய முயற்சி. தேங்காய், பழங்கள் ஆகியவை ஒரு நாள் பயன்பாட்டோடு முடிந்துவிடும்.
ஆனால், பல காலமாக இந்த புத்தகங்கள் அவர்கள் வீட்டில் இருக்கும். அனைவருக்கும் தேசப் பிதாவை பற்றியும், விடுதலை போராட்டத்தை பற்றியும் தெரியவரும் என்றார் அவர்.
மேடைகளில் மட்டுமே காந்தியை பற்றி பேசுவதை காட்டிலும், இது போன்ற புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது காந்திய சிந்தனைகளை மக்களிடையே பரவச்செய்யும் என்பதில் ஐயமில்லை

அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி: அமைச்சர் பூங்கோதை

கோவை, ஆக.30: தமிழகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி பெறுகின்றன என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறினார்.
தென்னிந்திய அளவிலான காருண்யா இவாஞ்சலின் நினைவு கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தலைமை வகித்து, அமைச்சர் பூங்கோதை போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில் அவர் மேலும் பேசியது:
நாட்டில் கல்வி வளர்ச்சி ஏற்பட மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடியை ஆண்டுதோறும் தமிழக அரசு ஒதுக்கி வருகிறது. இது தமிழக மொத்த பட்ஜெட்டில் 19 சதவீதம். இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து குழந்தைகளுமே ஆரம்ப கல்வியைப் பெறுகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார்

இன்றைய செய்திகள்

china medical univrsity

சீனாவுக்கு செல்லும் இந்திய மருத்துவ மாணவர்கள்

Aug 30, 2010
பெரும்பாலான மாணவர்களின் எதிர்கால கனவு டாக்டராக பணியாற்றுவது. இந்தியாவில் எம்.பி.எஸ்.எஸ்., படிப்புக்கான கால அளவு நான்கரை வருடம் பின் ஒரு வருடம் கட்டாயம் பயிற்சி டாக்டராக பணியாற்ற...
மாணவர்களின் தனித்திறமைகளைவெளிக்கொணர்வது ஆசிரியர் கடமை: இயக்குனர் பெருமாள்சாமி பேச்சு

Aug 30, 2010
ஓசூர்:""பள்ளி மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாடுகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்வதோடு, அவர்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்கள் கடமை,'' என தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குனர்...
சென்னையில் மாரத்தான்: சந்தோஷ் முதலிடம்:பெண்களில் சந்திரா முந்தினார்

Aug 30, 2010
சென்னை:மார்க் சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில் நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி., பரிசு வழங்கினார்.மார்க், தமிழ் மையம் சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயம்...
இளைஞர்களின் வழிகாட்டி கலிங்கமலை!

Aug 30, 2010
ராணுவம், போலீஸ் என சேவை செய்யும் துறைகளில் சேர விரும்புவர்களுக்கு 9 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வழிகாட்டியாக உள்ளார் மதுரை மாவட்டம் மேலூர் அ.வல்லாளபட்டி கலிங்கமலை.இந்த 42...
தனியார் பள்ளிகளுக்கு கிராக்கி:கர்நாடகாவில் திடீர் மாற்றம்

Aug 30, 2010
பெங்களூரு:கர்நாடக அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் தனியார் பள்ளிகளுக்குச் சென்றுவிடுவதாக சீர்த்திருத்த கமிஷன் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு...
உலக வங்கிக்கடன் உதவி முதலிடத்தில் இந்தியா

Aug 30, 2010
புதுடில்லி : உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:வளரும் மற்றும் ஏழை...
வெளி உலகை பார்த்தன வெள்ளைப்புலி குட்டிகள்

Aug 30, 2010
சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவில், இதுநாள்வரை கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு நேற்று திறந்து விடப்பட்ட வெள்ளைப்புலி குட்டிகளை பூங்கா அதிகாரிகளும், பார்வையாளர்களும்...
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்:மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

Aug 30, 2010
திருவள்ளூர்:"சந்திரயான் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியதால், நிலவில் நீர் உருவாகிறது என்பதை கண்டறிந்தோம். அதே போன்று, மாணவர்களாகிய நீங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக...
3ஜி சேவையால் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் பன்மடங்கு பெருகும்

Aug 30, 2010
டில்லி : 3ஜி சேவையினால் மின்னணு வர்த்தகம் (இ காமர்ஸ்) பன்மடங்கு பெருகும் என இ பே- ஆன்லைன் வர்த்தக இணையதளத்தின் தலைவர் ஜான்தானாஹியோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் மொபைல் போன்களில் 3ஜி சேவை...
புதுவை அரசு மருத்துவ மாணவர்களுக்கு இலவச கல்வி

Aug 30, 2010
புதுச்சேரி,  ஆக. 29:  புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் (படம்) தெரிவித்தார்.புதுச்சேரியில்...
படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம்

Aug 30, 2010
காரைக்குடி,ஆக.29: கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி இல்லை  என்றார் உள்துறை அமைச்சர்...
நேற்றைய செய்திகள்


சீனாவுக்கு செல்லும் இந்திய மருத்துவ மாணவர்கள்

பெரும்பாலான மாணவர்களின் எதிர்கால கனவு டாக்டராக பணியாற்றுவது. இந்தியாவில் எம்.பி.எஸ்.எஸ்., படிப்புக்கான கால அளவு நான்கரை வருடம்
china medical univrsity
பின் ஒரு வருடம் கட்டாயம் பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும்.
இந்தியாவில் இந்த கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் பெரும்பாலும் முடிந்து விட்டது. இங்கு இடம் கிடைக்காததால் பலர், வெளி நாட்டிலாவது தங்களது கனவான எம்.பி.பி.எஸ்., படிப்பை படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதனால் மருத்துவ படிப்புக்காக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. குறிப்பாக பழைய சோவியத்
யூனியன் நாடுகள் மற்றும் சீனாவுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சீனாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பு நல்ல சர்வதேச தரத்துடன், குறைந்த செலவுடனும், ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகிறது. படிப்புக் கான கால அளவு 5 ஆண்டுகள். விடுதி வசதியும் 3 ஸ்டார் வசதியுடன் செய்யப்பட்டுள்ளது.

நமது நாட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ்., படிப்பை முடிப்பதற்கு குறைந்தது 30 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால்
சீனாவில் ஒரு வருடத்துக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே செலவாகும். ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளில் 1.75 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை செலவாகும்.

சீனாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்து விட்டு "ஒரு வருடம் கட்டாயம் பயிற்சி டாக்டராக பணியாற்றுதல்' இந்தியாவில் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எம்.சி.ஐ., யும் அனுமதி அளித்துள்ளது. மேற்கண்ட காரணங்களினால் சீனாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வெளிநாடுகளில் 2002ம் ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) நடத்தும்
தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவில் இவர்களது படிப்பு அங்கீகரிக்கப்படும் என்பது முக்கியமானது.

எம்.சி.ஐ., யால் அங்கீகரிக்கப்பட்ட சீன மருத்துவ கல்லூரிகளின் விவரங்களைwww.mciindia.org/tools/prelease/eligibility.htm என்ற இணைய தளத்திலும், ரஷ்யா மற்றும் இதர நாடுகளின் கல்லூரிகளை தெரிந்து கொள்ள www.mciindia.org/know/acts/schedule3.htm என்ற இணைய தளத்தையும் பாருங்கள்.

மாணவர்களின் தனித்திறமைகளைவெளிக்கொணர்வது ஆசிரியர் கடமை: இயக்குனர் பெருமாள்சாமி பேச்சு

ஓசூர்:""பள்ளி மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாடுகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்வதோடு, அவர்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்கள் கடமை,'' என தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.ஓசூர் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கற்றல் குறைபாடு உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்காக, தமிழகத்தில் முதன் முறையாக கற்றல் குறைபாடு சிறப்பு கல்வி மையம் அமைக்கப்பட உள்ளது.

இங்கு, மாவட்டத்தில் உள்ள அனைத்துஅரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாகவும், கற்றல் முறையிலும் உள்ள குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கற்றல் குறைபாடு சிறப்பு கல்வி மையம் அடிக்கல் நாட்டு விழா, சிஷ்யா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது.பள்ளி கல்வித் துறை இயக்குனர் பெருமாள், அடிக்கல் நாட்டி பேசியதாவது:பள்ளி மாணவ, மாணவியரிடம் உள்ள கற்றல் குறைபாடுகள் பெரும்பாலும் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் தெரிவதில்லை. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வியறிவு குறைவு என முத்திரை குத்தி, ஆசிரியர்கள் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். பெற்றோரும் குழந்தைகளுடைய கற்றல் குறைபாடுகளை கண்டுகொள்வதில்லை. நல்ல அறிவு, சிந்தனையுள்ள குழந்தைகளும் ஒரு சில கற்றல் குறைபாடுகளால் போதிய வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி இல்லாமல் அவர்களுடைய கல்வி வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.

மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாடுகளை களைவதோடு, அவர்களிடம் மறைந்து கிடக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவது வகுப்பு ஆசிரியர்களின் முதற்கடமை. கற்றல் குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறவியிலே வரக்கூடிய நோய் இல்லை. இதுவும் எளிதில் நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு குறைபாடுமட்டுமே. மூன்று மாதம் மட்டும் பள்ளிக்குச் சென்ற தாமஸ் ஆல்வா எடிசன், பிற்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளைஉருவாக்கினார். அதனால், மாணவர்களுடைய கற்றல் குறைபாடுகளை களைந்து சிறப்பு பயிற்சி அளித்தால், அவர்களுடைய உள்ளார்ந்த தனித்திறமையை கண்டுபிடித்து வளர்க்க முடியும்.இவ்வாறு பெருமாள் பேசினார்.

சென்னையில் மாரத்தான்: சந்தோஷ் முதலிடம்:பெண்களில் சந்திரா முந்தினார்

சென்னை:மார்க் சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில் நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி., பரிசு வழங்கினார்.மார்க், தமிழ் மையம் சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. தேசிய அளவில், மாநில அளவில் 21 கி.மீ., தூரத்திற்கு நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.சென்னை அண்ணா சதுக்கம் முன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் நேற்று அதிகாலையில் குவிந்தனர். 21 கி.மீ., தூரம் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை, தி.மு.க., எம்.பி., கனிமொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன், அமைச்சர்கள் மைதீன் கான், பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் 21 கி.மீ., தூரம் ஓட்டப்பந்தயம் ஆண், பெண் என இரு பாலருக்கும் நடத்தப்பட்டது. சென்னை மக்கள் ஓட்டம் என்ற பெயரில் 7 கி.மீ., தூரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 500 மீட்டர் தூரத்திற்கு வீல் சேர் ஓட்டும் போட்டியும் ஆண், பெண் என இரு பாலருக்கும் நடத்தப்பட்டது.தேசிய அளவில் 21 கி.மீ., தூரத்திற்கு நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தோஷ் முதலிடத்தையும், அரியானாவைச் சேர்ந்த சுனில்குமார் இரண்டாம் இடத்தையும், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

பெண்கள் பிரிவில் பம்பா சந்திரா முதலிடத்தையும், பிரீத்தி ராவ் இரண்டாம் இடத்தையும், ரேமேஷ்வரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மாநில அளவில் நடந்த 21 கி.மீ., தூரத்திற்கு நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் நாகேந்திர ராவ் முதலிடத்தையும், திலக் இரண்டாம் இடத்தையும், ராஜேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.பெண்கள் பிரிவில் சுதா முதலிடத்தையும், பத்மாவதி இரண்டாம் இடத்தையும், சாந்தி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட வீல் சேர் போட்டியில் ஆண்கள் பிரிவில் சீனிவாசன் முதலிடத்தையும், மாரியப்பன் இரண்டாம் இடத்தையும், மோகன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.பெண்கள் பிரிவில் தீபிகா முதலிடத்தையும், தேவகி இரண்டாம் இடத்தையும், அனுராதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி., அகிலா சீனிவாசன், மார்க் ரெட்டி ஆகியோர் பரிசு வழங்கினர்.
விழாவில் கனிமொழி பேசுகையில், "கிவ்லைப்' என்ற அமைப்பில் உள்ள 8 ஆயிரம் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையிலும், அவர்களின் வாழ்க்கை மாற்றி அமைக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி மூலக்காரணமாக அமைந்துள்ளது' என்றார்.


இளைஞர்களின் வழிகாட்டி கலிங்கமலை!

ராணுவம், போலீஸ் என சேவை செய்யும் துறைகளில் சேர விரும்புவர்களுக்கு 9 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வழிகாட்டியாக உள்ளார் மதுரை மாவட்டம் மேலூர் அ.வல்லாளபட்டி கலிங்கமலை.

இந்த 42 வயதுக்காரர் 1995 முதல் 2000 வரை ராணுவத்தில் பணியாற்றியவர். பின் ஊர் திரும்பி, கவுன்சிலரான இவர், ராணுவம், போலீசில் சேர செட்டியார்பட்டி அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் 2001 முதல் எழுத்து பயிற்சி, உடற்பயிற்சி அளிக்க துவங்கினார். இங்கு பயிற்சி பெறுபவர்களிடம் எந்த கட்டணமும் பெறுவதில்லை. தற்போது மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, தேனி,ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என வெளி மாவட்ட இளைஞர்களும் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். ""இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி எடுத்ததில், 625 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இங்கிருந்து ராணுவம், கடற்படை, போலீஸ், எஸ்.ஐ., என பல துறைகளிலும் இளைஞர்கள் சென்று சேர்ந்து உள்ளனர்.   தற்போது 100 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு ஓட்ட பயிற்சி பெற சரியான டிராக் வசதி இல்லை. மேலும் கயிறு ஏறுவது உட்பட பல பயிற்சிகள் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்கு முறையான உபகரணங் கள் இல்லை. வெளியூர் இளைஞர்கள் தங்க இட வசதியில்லை. தற்போது நடந்த எஸ்.ஐ., எழுத்து பயிற்சி தேர்வில் என்னிடம் இருந்து சென்ற 75 இளைஞர்களில் 37 பேர் தேர்வு பெற்று ள்ளனர்,'' என்று கூறும் கலிங்கமலையிடம், இலவச பயிற்சி பெற விரும்பினாலோ, ஸ்பான்சர் செய்ய விரும்பினாலோ 91595 21288க்கு "கை' கொடுங்க.

தனியார் பள்ளிகளுக்கு கிராக்கி:கர்நாடகாவில் திடீர் மாற்றம்

பெங்களூரு:கர்நாடக அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் தனியார் பள்ளிகளுக்குச் சென்றுவிடுவதாக சீர்த்திருத்த கமிஷன் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மேல்நிலை ஆரம்ப அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் சென்றுவிட்டனர்.இதுகுறித்து ஆய்வு செய்த அம்மாநில சீர்த்திருத்த கமிஷன், தனது இடைக்கால அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அரசு மேல்நிலை ஆரம்ப பள்ளிகளில் இருந்து 2.5 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் சென்றுள்ளனர்.
அதே காலக்கட்டத்தில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 807லிருந்து 21 ஆயிரத்து 976 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு என்று ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையும் மீறி அங்கு, அரசுப் பள்ளிகளில் இருந்து பணம் செலுத்தி படிக்கும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லுவதற்கு காரணம் அங்கு மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தனியார் பள்ளிகளில், மொழி சார்ந்த பாடங்கள், தகவல் தொடர்புதிறன், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்கள் மாணவர்களுக்கு எளிதாகவும், அக்கறையோடும் சொல்லித் தரப்படுகின்றன. மாணவர்களின் தனித் திறமைகளையும் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கின்றன.

மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்கள் உதவுகின்றனர். மிக முக்கியமாக, ஆங்கில வழியில் கல்வி கற்பதையே மாணவர்கள் விரும்புகின்றனர். இந்த காரணங்களால், தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதையே பெற்றோர்களும் விரும்புகின்றனர்.அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை மேம்படுத்த தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். குறிப்பாக, மேனிலை ஆரம்ப பள்ளிகளில் தற்போது, பள்ளி படிப்புடன், ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் தான் பாடம் நடத்துகின்றனர். அந்த இடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கன்னடம், ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை பயிற்றுவிக்க, தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் நல்ல ரிசல்ட் காட்டினால், ஊக்கத்தொகை அளிக்கலாம். உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். ஒரு வகுப்பறை, ஒரு ஆசிரியர் பள்ளிக்கூடங்களை ஒழித்துவிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உலக வங்கிக்கடன் உதவி முதலிடத்தில் இந்தியா

புதுடில்லி : உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வறுமையை ஒழிப்பதற்கும் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்கள் வட்டியில்லாமல் கடன் வழங்குகின்றன.இந்த கடனுதவிகள் முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதையும் அந்த அமைப்புகள் கண்காணிக்கின்றன. இதில் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நாடுகளுக்கு கடனுதவி அதிகரித்து வழங்கப்படுகிறது. இந்த வகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் உதவியை சிறப்பாக கையாண்டதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச நிதியங்கள் தாராளமாக கடன் வழங்கியுள்ளன.


இதனால், 2009-10ம் நிதியாண்டில் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிடமிருந்து, 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை பெற்று கடன்பெறும் ஏழை நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து மெக்சிகோ 31 ஆயிரம் கோடி கடனுதவியை பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது.தென்னாப்ரிக்கா (18,620 கோடி), பிரேசில் (18,130 கோடி), துருக்கி (14,700 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதில், சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி.,) வாயிலாக 16 ஆயிரத்து 660 கோடியும், சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (ஐ.டி.ஏ.,) மூலம் 6,370 கோடியும், உலக வங்கியிடமிருந்து (மொத்தம் 23,030 கோடி) இந்தியா கடனாக பெற்றுள்ளது.இதுதவிர வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக அமெரிக்காவின் சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியம்(ஐ.எப்.ஏ.டி.,), பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித் துறை(டி.எப்.ஐ.,), ஜெர்மனி அரசு வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி நிதியம் (ஓ.டி.ஏ.,) ஆகியவற்றிடமிருந்தும் அதிகளவு நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


வெளி உலகை பார்த்தன வெள்ளைப்புலி குட்டிகள்

சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவில், இதுநாள்வரை கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு நேற்று திறந்து விடப்பட்ட வெள்ளைப்புலி குட்டிகளை பூங்கா அதிகாரிகளும், பார்வையாளர்களும் கைத்தட்டி வரவேற்றனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனு என்ற பெண் வெள்ளைப்புலி கடந்த ஜூன் மாதம் மூன்று குட்டிகளை ஈன்றது. புலிக் குட்டிகளும், தாய் புலி அனுவும் 83 நாட்களுக்கு பிறகு நேற்று, பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டன.

தலைமை வன உயிரின காப்பாளர் சுந்தரராஜன், பூங்கா இயக்குனர் ரெட்டி, கூடுதல் இயக்குனர் யுவராஜ், உதவி இயக்குனர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள், பார்வையாளர்கள் கைத்தட்டி புலிக் குட்டிகளை வரவேற்றனர். பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.அழகிய, வெள்ளைப்புலி குட்டிகள், பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளன என்ற தகவலறிந்ததும், பூங்காவில் பல இடங்களில் இருந்த பார்வையாளர்கள் வெள்ளைப்புலி கூண்டு அருகே குவிந்தனர்.இந்நிலையில், 83 நாட்களுக்கு பிறகு கூண்டில் இருந்து வெளியே வந்த உற்சாகத்தில் புலிக் குட்டிகள் தாயுடன் சுதந்திரமாக விளையாடின.

இது குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் சுந்தரராஜன் கூறுகையில்," தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களை சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று (நேற்று) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ள புலிக் குட்டிகள் ஒவ்வொன்றும், 10 கிலோ முதல் 12 கிலோ எடை கொண்டதாக உள்ளன. மூன்று குட்டிகளில் இரண்டு பெண், ஒன்று ஆண். தற்போது, இந்த குட்டிகளுக்கு உணவாக தினசரி ஒரு கிலோ மாட்டிறைச்சி, ஒரு கிலோ கோழி இறைச்சி வழங்கப்படுகிறது.புலிக் குட்டிகளுக்கு விரைவில் தமிழ் பெயர் வைக்கப்படும். விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தில் சேர பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்' என்றார்.

பூங்காவின் புதிய வரவான வெள்ளைப்புலி குட்டிகளுக்கு, முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டுவார் என்று பூங்கா ஊழியர்கள் சிலர் கூறினர். அதற்கான வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, பறவைகள் பண்ணை அருகே, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் சார்பில், டீ ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, டீ மற்றும் டீத்துள் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பார்வையாளர்களின் வசதிக்காக மேலும் பல வசதிகளை ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

யானை, பறவை தத்தெடுப்பு:வண்டலூர் பூங்காவில் அமல்படுத்தப்பட்டுள்ள விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தில் சேர பொதுமக்கள் முன்வரவேண்டும் என, "தினமலர்' நாளிதழ் சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி, பூங்கா நிர்வாகத்தை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தி.நகரில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர். இன்ஜினியரிங் அன்ட் கான்ட்ராக்டர் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா என்பவர், 97 ஆயிரத்து 690 ரூபாயை வழங்கி, ஒரு யானையை ஒரு வருடத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதேபோல், சென்னையை சேர்ந்த ஒருவர், ஒரு பறவையை தத்தெடுத்துள்ளார்.

தாய்ப் புலியின் அக்கறை:விலங்குகளுக்கும் தாய்பாசம் உண்டு என்பது நேற்று வண்டலூர் பூங்காவில் நிரூபணமானது. கூண்டில் இருந்து முதலில் வெளியே வந்த தாய்ப் புலி, அங்கிருந்த கான்கிரீட் தளம் வழுக்குகிறதா என்பதை, காலால் தேய்த்து சோதனை செய்து பார்த்தது. பின், நான்கு கால்களையும் மடக்கி, முட்டிபோட்டு நடப்பது போல் கான்கிரீட் தளம் வழியாக கூண்டில் இருந்து இறங்கியது. தாய்ப் புலி நடந்து காட்டியது போலவே மூன்று குட்டிகளும் கால்களை முட்டிபோது, தவழ்ந்தபடி கூண்டில் இருந்து இறங்கின. குட்டிகள் சறுக்கி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக தாய்ப்புலி எடுத்துக் கொண்ட இந்த அக்கறை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்:மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

திருவள்ளூர்:"சந்திரயான் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியதால், நிலவில் நீர் உருவாகிறது என்பதை கண்டறிந்தோம். அதே போன்று, மாணவர்களாகிய நீங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் சாதிக்க முடியும்' என, சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ்., பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலையின் நிறுவனர் பேராசிரியர் விஜயரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.கல்லூரி தலைவர் கோவிந்தராஜன், நிர்வாக இயக்குனர் மற்றும் செயலர் ஆறுமுகம், துணைத் தலைவர் தேசமுத்து, இயக்குனர்கள் பழனி, விஜயகுமார், கபிலன், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் வரவேற்றார்.விழாவில், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியபோது, "இக்கல்லூரி தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், குறுகிய காலத்தில் படிப்பு மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பல சாதனைகள் படைத்து சிறந்து விளங்குகிறது.சந்திரயானுக்கு முன் நிலவுக்கு 69 விண்கலங்களை உலக நாடுகள் செலுத்தி ஆய்வு நடத்தின. 11 சாதனங்களைக் கொண்டு 70வது விண்கலமாக நிலவில் ஆய்வு நடத்த சந்திரயான் சென்றது. நிலவில் நீர் இருப்பது மட்டுமின்றி, நிலவில் நீர் உருவாகிறது என்பதை சந்திரயான் மூலம் உலகிற்கு, இந்தியா தெளிவுபடுத்தியது.

சந்திரயான் மூலம் இந்தியா எங்களுக்கு அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் நிலவில் நீர் உருவாகிறது என்பதை கண்டறிந்து முதல் முயற்சியில் வென்றோம். இன்றைய இந்தியா, சந்திரயானுக்கு பிறகு மாற்றம் கண்டுள்ளது.மாணவர்களாகிய உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்பதற்கு சந்திரயான் சிறந்த உதாரணம். கிராமப்புறங்களில் இருந்து தமிழ் வழிக் கல்வி பயின்ற ஏராளமான மாணவர்கள் இங்கு பயின்று வருவதை கேட்டறிந்தேன்.

3ஜி சேவையால் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் பன்மடங்கு பெருகும்

டில்லி : 3ஜி சேவையினால் மின்னணு வர்த்தகம் (இ காமர்ஸ்) பன்மடங்கு பெருகும் என இ பே- ஆன்லைன் வர்த்தக இணையதளத்தின் தலைவர் ஜான்தானாஹியோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் மொபைல் போன்களில் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையினால் இ காமர்ஸ் எனும் மின்னணு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் பன்மடங்கு உயரும் என கூறப்படுகிறது. இது குறித்து இபே அமைப்பின் தலைவர் ஜோனாத்தன் ஹியோ பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், நாட்டின் பெரும்பாலானோர் ஆன்லைன் வர்த்தகத்தினை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தொடக்கத்தில் 30 சதவீதமாக இருந்த ஆன்லைன் வர்த்தகம், தற்போது 60 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இந்தியாவில் 2.5 மில்லியன் இந்தியர்கள் ஆன்லைன் வர்த்தகத்தினை பயன்படுத்துகின்றனர். தற்பாது இ-பே அமைப்பின் மூலம் உற்பத்தி பொருட்கள் வாங்குவது, விற்பது உள்ளிட்ட வர்த்தகம் மூலம் 12,800 விற்பனையாளர்கள் உள்ளனர். இதன் மூலம் ரூ. 150 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. மேலும் இந்தியாவில் 3ஜி மொபைல் சேவை அதிகமானல் ஆன்லைன் வர்த்தமும் பெருகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுவை அரசு மருத்துவ மாணவர்களுக்கு இலவச கல்வி

புதுச்சேரி,  ஆக. 29:  புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் (படம்) தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியது:
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த கல்லூரியில் ஆண்டுக்கு 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.
தனி வகுப்பு கட்டணம்கூட வசூலிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மருத்துவக் கல்வி இலவசமாக வழங்கப்படும். மாணவர் சேர்க்கையின்போது இவர்களிடம் திருப்பி அளிக்கக்கூடிய வைப்புத் தொகையாக  10 முதல் 15 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்.
படிப்பை முடித்த பிறகு அவர்கள் செலுத்திய தொகை அவர்களிடமே திரும்ப வழங்கப்படும்.
 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அதனால் அவர்களுக்கு இடங்கள் வழங்குவது குறித்தும், அவர்களுக்கான  கட்டணம் குறித்தும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும்.
 இம்மருத்துவக் கல்லூரிக்கு இதுவரை
 137 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  200 கோடிக்குள் மருத்துவக் கல்லூரியின் மொத்த பணிகளும் முடிக்கப்படும் என்றார்

படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம்

காரைக்குடி,ஆக.29: கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி இல்லை  என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம், ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம் சார்பில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 643 மாணவ, மாணவிகளுக்கு | 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கி, அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:
கடுமையான போட்டிகளின் மூலமாக உயர் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பெறுவதுதான் கல்வி. அதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி முடிய நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால், 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேர் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். நாட்டின் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
எனது அரசியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் பெறுவோர் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.
கல்விக் கடனுக்கான வட்டி விவரம் குறித்து நிதித் துறையிலிருந்து எனக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி கிடையவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள், எதிலும் முதல் வரிசையில் இடம்பெற வேண்டும். வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வங்கித் துறையில் மட்டும் 1 லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படவிருக்கிறார்கள். அந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
விழாவில், இந்தியன் ஒவர்சீஸ் வங்கித் தலைவர் எஸ்.ஏ. பட் தொடக்க உரையாற்றினார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கேஆர். ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், தொழிலதிபர் பிஎல். படிக்காசு, சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் எஸ். மாங்குடி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பி.வரதராஜன், யுகோ வங்கியின் இணைப் பொது மேலாளர் டி.என்.ரெüத்ரி, பேங்க் ஆப் இந்தியா இணைப் பொது மேலாளர் ஆர்.ஏ.சங்கரநாராயணன், கனரா வங்கியின் இணைப் பொது மேலாளர் பி.ஆர்.பாலசுந்தர், ஸ்டேட் வங்கி இணைப் பொது மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் எம். ராமதாஸ் வரவேற்றார். இந்தியன் வங்கியின் வட்டாரத் தலைவர் கதிரேசன் நன்றி கூறினார்.

இன்றைய செய்திகள்

அன்னை தெரசா - நூற்றாண்டு விழா நினைவுகள்

Aug 29, 2010
எம்.ஜி. தேவசகாயம் (இ.ஆ.ப. ஓ‌ய்வு)அன்புக்கும், கருணைக்கும் ஓர் மகத்தான கட்டமைப்பை உருவாக்கி அதை உலகம் எங்கிலும் தழைத்துப் பரவச் செய்து, போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய தெய்வத் திருஉருவமாக...



இ-டிரெய்னிங் அளிக்க எட்சர்வ், கனடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Aug 29, 2010
சென்னை: மாணவர்களுக்கு இ-டிரெய்னிங் அளிப்பதற்கு எட்சர்வ், கனடா நிறுவனத்துடன் இணைகிறது.கனடா நிறுவனமான கோரல் கார்ப்பரேஷனுடன், கூட்டாண்மை உடன்படிக்கையில், எட்சர்வ் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம்,...
Aug 29, 2010
வாஷிங்டன்: சர்வதேச அளவில் விலையுயர்ந்த ஆபரணமாக பிளாட்டினத்திற்கு அடுத்தபடியாக உள்ளது வைரம்.இந்த வைரத்தைக் கொண்டு கம்ப்யூட்டரை உருவாக்குவது குறித்து கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி...
Aug 29, 2010
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் ராஜ்யகொடி வெளியிட்ட அறிக்கை :மதுரை காமராஜ் பல்கலையில் நவ. 2010க்கான இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் அல்லாத முறை தேர்வுகள் நவ., 1ல் துவங்குகின்றன. இளநிலைத்...
Aug 29, 2010
தேனி : வேலையில்லா இளைஞர்களுக்கு புதிய வடிவிலான பிணையில்லா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு...
Aug 29, 2010
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய மருத்துவ திட்டத்தை அறிவிக்க உள்ளது.இலவச கலர் "டிவி', முதல்வர் காப்பீட்டு திட்டம், முதல்வர் வீட்டு வசதி திட்டம் போன்ற பல திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. அரசின்...
Aug 29, 2010
சென்னை : ""உணவில் உப்பை தவிர்த்தால் முதுமையில் வரும் நோய்களில் இருந்து விடுபடலாம்,'' என, பேராசிரியர் நந்தகோபாலன் தெரிவித்தார்."ப்ரோபஸ் கிளப் ஆப் சென்னை' ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம்...
Aug 29, 2010
பெங்களூரு :ஆறு வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பறந்து வந்தார் நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி.தனியார் சேனலுக்காக கன்னட நடிகர்...
Aug 29, 2010
சென்னை, ஆக. 28: தற்கால சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய மரபு சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஈடுபட்டு...
Aug 29, 2010
சென்னை, ஆக. 28: தனியார் கல்வி நிலையங்கள் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களாக மாறுவதைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்...





நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் "சி.எஸ்.': பிரணாப் முகர்ஜி

Aug 29, 2010
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட அதை பெற்றுக்கொள்கிறார்கோவை, ஆக. 28: நாட்டில் நிலவிய...




நேற்றைய செய்திகள்