ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு: திருச்சியில் ஜூலை 2-ல் தொடக்கம்

திருச்சி,ஜுன்.29,
சென்னை, ஜூன் 17: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி திருச்சியில் தொடங்குகிறது.

இந்த ஆண்டில் மொத்தமுள்ள 19,292 இடங்களுக்கு, 17,774 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதாவது 1,518 காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குநர் இளங்கோவன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

2010-2011 ஆம் கல்வியாண்டில் இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 17,774 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒற்றைச் சாளர முறையில் அரசு ஒதுக்கீடாக தமிழகத்தில் உள்ள 756 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 19,292 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் 2010-2011 கல்வியாண்டில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீடு செய்யும் சேர்க்கை இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு, திருச்சியில் உள்ள 3 மையங்களில் ஜூலை 2-ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

தரவரிசைப் பட்டியல்:மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணி முடிந்தவுடன் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதங்கள் ஜூன் 25-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

0 comments: