தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை விஜயகாந்த் வரவேற்பு!

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜ
யகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்து அறிக்கையில் தெரிவிக்கும்போது:

" உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. தற்பொழுது அரசாங்கத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு கூட வேலை கிடைப்பதில்லை. ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 62 லட்சம் பேர்.

ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று? அரசுத் தொழிற்சாலைகளின் பங்கு தனியாருக்கு விற்கப்படுகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று தனியார் துறை வளர்க்கப்படுகிறது. ஆகவே குறைந்தபட்சம், தற்பொழுது கொண்டு வரப்படவுள்ள சட்டம் தனியார் துறையிலும் தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

 

0 comments: