25 வீதமான விபத்துக்களுக்கு களைப்பே காரணம்

25 வீதமான விபத்துக்களுக்கு களைப்பே காரணம்

June 29, 2010

சுவீடனில் செய்யப்பட்ட ஆய்வொன்று நடைபெறும் மொத்த விபத்துக்களில் 25 வீதமானவை வாகனங்களை ஓடுவோர் களைப்படையும் காரணத்தால் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. மதுபானம் அருந்தி போதை அளவு 1.2 ஆக உயரும்போதே களைப்பும் தோன்றி கண்கள் களைப்படைந்து விடுகின்றன. மேலும் கோடை விடுமுறை காலத்தில் நீண்ட நேரம் வாகனங்களை ஓடுவோர் தமது உடல் களைப்படைவதை அடிக்கடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. களைப்படையும் போது வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி சுமார் 15 – 20 நிமிடங்களாவது உறங்கிவிட்டு தொடர்ந்து ஓட வேண்டும் என்றும் அந்த ஆய்வு ஆலோசனை கூறுகிறது. களைப்பு ஏற்பட்டால் கார்க் கதவின் கண்ணாடியை சிறிது இறக்கவும், இசையைப் போடவும் என்றும் கூறுகிறது

 

0 comments: