கல்வி தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும் : அமைச்சர் பொன்முடி


கல்வி தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும் என, காரைக்குடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில், இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி,


அரசின் தற்போதைய குறிக்கோள் உயர்கல்விபெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும். இதற்கான தரத்தை உயர்த்த பல்கலைகள் கருவியாக செயல்படவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பட்டதாரியாவது உருவாகவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறது. தமிழகம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. வேலைவாய்ப்பு வழங்க,தொழில்மயமாதல் அவசியம்.


தொழில்மயமாதலுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். இம்முரண்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என ஆராய்ச்சி செய்யவேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கவேண்டும். தமிழகத்தில் தொழில்திறன்களை வளர்க்க நூறு சமுதாய கல்லூரிகள் செப்டம்பரில் துவக்கப்படும். கல்வி தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும், என்றார்.


 

0 comments: