இந்தியாவின் வரலாறு-{விக்கிபீடிடா}

நாம் அறிந்தவரை இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகம் இந்திய துணைகண்டத்தின் வாடா மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது. இந்தியாவின் முழு வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிகம் 2600-1900 கி.மு. வரை நீடித்திருந்தது. வெண்கலக் காலம் கி.மு 2000 ஆண்டின் துவக்கம் வரை மேலோங்கி இருந்தது, பின்னர் அதனை தொடர்ந்த இரும்புக் காலமும், வேதக் காலமும் இந்தியாவின் கங்கைக்கரை சமவெளிகளில் இருந்த மக்களின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தியதன் மூலம் மகாஜனபதாஸ் போன்ற பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கின. இது போன்று இருந்த எதோ ஒரு ராஜ்ஜியத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில், பிறந்த மகதா, மகாவீரர், கவுத்தாம புத்தர் தங்களது ஸ்ரமன் தத்துவங்களை மக்களிடையே பரப்பினர்.


பின்னர் வந்த சாம்ரஜ்ஜியங்களும் ராஜ்ஜியங்களும் இந்த பகுதியை ஆண்டதன் மூலம் இந்த பகுதியின் பண்பாடு மேலும் மேருகைப் பெற்றது.கி.மு 543 அகேமேனிதின் பெர்சிய சாம்ராஜ்ஜியம் [1]முதல் கி.மு. 326 அலேக்சாண்டேர் தி கிரேட்[2]வரை நம் கருத்தில் நாம் நிறுத்தி பார்க்கலாம். மச்ற்றியாவைக் சார்ந்த டெமெத்ரியஸால் கண்டுபிடிக்கப்பட்டஇந்தோ-கிரேக்க ராஜ்ஜியம் கந்தாரா, பஞ்சாப் போன்ற இடங்களை தன்னுள் கொண்டிருந்தது. கி.மு 184 ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மேனண்டேர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில், பண்பாட்டிலும், வாணிகத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைத்தது.


கி.மு, 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கிய மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இந்திய துணை கண்டம் ஒன்றுபட்டது. நாளடைவில் இதே கண்டம், சிறிய பகுதிகளாக உடைந்து, இடைப்பட்ட ராஜ்ஜியங்களால் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யபடப் பட்டது.கி.மு. ௪ ஆம் நூற்றந்தில் துணைகண்டத்தின் மேற்கு பகுதிகள் ஒன்று படுத்தப்பட்டன. இது குப்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ், ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலத்திற்கு ஒன்று பட்டே இருந்தது.இந்து மதத்தின் எழுச்சி தீவிரமாக வெளிப்பட்ட இந்த காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று அழைப்பர்.இதே கால கட்டங்களில், பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய பகுதி சாலுக்கியர்கள், சோழர்கள், பல்லவர்கள்மற்றும் பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது.வளமைப்பெற்ற இந்திய நாகரிகம், ஆட்சி முறைகள்,பண்பாடு,ஆசியாவில் பல பகுதிகளில் பரவிய இந்து மதம் மற்றும் புத்த மதம் இருந்த இந்த காலத்தை தென்னிந்தியாவும் பொற்காலமாகவே கருதியது.


கி.பி. 77 ல் கேரளா ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிக பிணைப்புகள் கொண்டிருந்தது.கி.பி. 712 ல் ,அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்த துணை கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தற்கு பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினார்[3]. இந்துவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டுவரை இந்திய துணை கண்டம்சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது.இவற்றுள் கச்னவீத், கோரித், டில்லி சுல்தான்கள்,முகலாய சாம்ராஜ்ஜியம் புகழ் பெற்றவை.துணை கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது.முகலாய அரசர்கள் இந்தியாவுக்குள் மத்திய கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர்.முகலாயர்களுடன் விஜயநகர ராஜ்ஜியம், மராத்தா ராஜ்ஜியம்,ரஜபுதராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும் மேற்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம் 18 ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள்,பலோசியர்கள், சீக்கியர்கள்வாடா மேற்கு துனைகன்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.[4]


௧௮ ஆம் நூற்றாண்டு பதியிஇருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வது.இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி முதல் இந்திய சுதந்திர போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவில் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்த கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியயையும் (இன்பிரா ஸ்ட்ரக்சுர்) பொருளாதாரத்தின் குலைவையும் கண்டறிந்தது.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டு தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்த துணை கண்டம் ௧௯௪௭ ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது.


பொருளடக்கம்

[மறை]
  • 1 வரலாற்று ஊழிக்கு முன்
    • 1.1 கற்காலம்
    • 1.2 வெண்கலக் காலம்
      • 1.2.1 வேத காலம்
    • 1.3 மகாஜனபதங்கள்
    • 1.4 பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள்
  • 2 மவுரியர்களின் காலம்
  • 3 பழைய மத்திய சமஸ்தானகள்-பொற்காலம்
  • 4 வட மேற்கு கலப்பு பண்பாடுகள்
    • 4.1 இந்தியாவுடன் ரோமர்களின் வணிகம்
    • 4.2 குப்தா அரச மரபு
  • 5 பின்னர் வந்த நாட்களில் எழுந்த மத்திய ராஜ்ஜியங்கள்- தனிசிராப்புடைய காலம்
  • 6 இஸ்லாமிய சுல்தான்கள்
    • 6.1 டில்லி சுல்தான்கள்
    • 6.2 முகலாய காலம்
  • 7 முகலாயர்களுக்கு பின்னர் வந்த ராஜ்ஜியங்கள்
  • 8 நாட்டின் குடியேற்றத்தை அமைத்த காலம்
    • 8.1 ஆங்கிலேயர் அரசாட்சி
  • 9 இந்திய சுதந்திர இயக்கம்
  • 10 சுதந்திரம் மற்றும் பிரிவினை


வரலாற்று ஊழிக்கு முன்

கற்காலம்

முதன்மைக் கட்டுரை: South Asian Stone Age
மேலும் தகவல்களுக்கு: Mehrgarh and Rock Shelters of Bhimbetka
பீம்பெட்கா பாறை ஓவியம்

ஹோமோ எரெக்டஸின் தனிமைப்படுத்தப்பட்ட மிச்சங்கள் மத்திய இந்தியப் பகுதியில் உள்ள நர்மதா சமவெளியில் கண்டெடுக்கப்பட்டது. இது பனி உறைந்திந்திருந்த மத்திய பிளைச்டோசீன் காலத்திலேயே அதாவது 200,000 இலிருந்து 500,000 ஆண்டுகளுக்கு நடுவே பரிணாமம் அடைந்த உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை ஊர்ஜினப் படுத்துகின்றது.[5][6]ஆனால் இந்து மகா சமுத்திர கரையோரம் இருந்த ஆபிரிக்க இடப்பெயர்ப்பின் அடையாளங்கள் சுவுடே இல்லாமல் இருப்பதால் அது தொலைந்ததாகவே கருதப்படுகிறது.பணியுரைக் காலத்திற்கு பின் வந்த வெள்ளத்தினால் தமிழ் நாட்டில், (75,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோபா எரிமலை வெடிப்பதற்கு முன்னரும் பின்னரும்) பரிணாம வளர்ச்சியடைந்த நவீன மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டது. 25,000 த்திலிருந்து 30,000 ஆண்டு காலம் வரை மத்திய கற்காலம் இந்த துணை கண்டத்தில் நீடித்திருந்தது.இன்னும் விரிவான குடியேற்றங்கள் இந்த துணை கண்டத்தில் பனியுரை காலத்தின் இறுதி கட்டங்களில் அதாவது ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்று யூகிக்கப் படுகிறது.நிச்சயமாக சொல்லக்கூடிய நிலையான குடியேற்றங்கள் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் தற்கால மத்திய பிரதேசத்தில், ராக் ஷேல்டேர்ஸ் ஆப பீம்பெட்கா என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன.பாகிஸ்தானில் உள்ள தற்கால பலோசிச்தானில் இருந்த மேர்கர்ஹ் கண்டுபிடிப்புகள் தென்னாசியாவில், புதிய கற்காலத்தின் ஆரம்பக் கால பண்பாட்டைக் குறிக்கின்றன.இது சுமார் கி.மு. 7000௦௦௦ ஆண்டுக்குமுன் இருந்தது என்று கணக்கிடப்படுகிறது.இந்த புதிய கற்காலம் இருந்தது என்பதற்கான தடையங்கள் காம்பட் வளைகுடாவில்மூழ்கி இருந்தாலும், அதனையும் கண்டு பிடித்துள்ளனர். ரேடியோ கார்பன் முறை இதனை கி.மு. 7500 ஆண்டு என்று கணக்கிட்டுள்ளது.[7] புதிய கற்காலம் முடிவுக்கு வரம் காலத்தில் இருந்த பண்பாடு கி.மு. 6000-2000 ஆண்டுகளில் இந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாகவும் தென்னிந்தியாவில் கி.மு. 2800 - 1200 ஆண்டுகளில் இருந்ததாகவும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.


துணைகண்டத்தின் இந்த பகுதியில் இரண்டு மில்லியன் ஆண்டுகாலங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இது தற்கால பாகிஸ்தான் பகுதியில் உள்ளது.[8][9] இந்த பகுதியின் பழைமையான வரலாறு, இப்பகுதி தென்னாசியாவின் மிகப் பழைமையான குடியேற்றங்களையும்[10],[11][12]


தென்னாசியாவில் ஆரம்பக்காலங்களில் கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருள் புர இடங்களில் பழைய கற்காலத்தில்சொவன் நதிக்கரையோரம் இருந்த ஹோமொனிட் புரயிடமும் ஒன்று.[13] கிராம வாசிப்பு வாழ்கையை மேர்கர்ஹில்உள்ள புதிய கற்காலத்தின் புரயிடங்கள் காட்டுகின்றன.[14] இந்து சமவெளி நாகரிகம்[15] போல வளர்ச்சியடைந்த நகர வாழ்கையை காட்டும் நாகரிகங்கள் மொகேன்ஜதாரோ, லோத்தல் , ஹரப்பா போன்ற இடங்களில் இருந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன. [16]

வெண்கலக் காலம்

முதன்மைக் கட்டுரை: Indus Valley Civilization
இந்தியாவின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கற்பனைக்கண்ட லோத்தல்
இந்து சமவெளி நாகரிகத்தின் "தலைமை குருக்கொள் "

இந்து சமவெளி நாக்கரிகத்தின் ஆரம்பக்காலங்களில், கி.மு. 3300 ஆண்டில் வெண்கலக் காலம் இந்திய துணை கண்டத்தில்துவங்கியது.இது இந்து நதி மற்றும் அதன் கிளைகளை ஆதாரமாகக் கொண்டு இருந்தது. மேலும் கக்கர்-ஹக்ரா சமவெளி,[11] கங்கா-யமுனா,டோப் ,[17] குஜராத்,[18] மற்றும் மேற்குஆப்கனிஸ்தான்பகுதிகளிலும் இது தழைத்து இருந்தது. .[19] இந்த நாகரிகம் பெரும்பாலும் இன்றைய இந்தியாவைச்சேர்ந்த (குஜராத்,ஹரியானா, பஞ்சாப் ராஜஸ்தான் பகுதிகளிலும்) மற்றும் இன்றைய பாகிஸ்தானை சேர்ந்த (சிந்து,பஞ்சாப்,பலோசிஸ்தான் பகுதிகளில்) நிறைந்திருந்தது. வரலாற்றைச் சார்ந்து பார்க்கும் பொது பண்டைய இந்தியா , மெசபொடமியா, பண்டைய எகிப்து போல உலகிலேயே பழமை வாய்ந்த நகர நாகரிகத்தைக் கொண்டுள்ளது.இந்து நதி சமவெளியில் வாழ்ந்த மக்கள் ஹரப்பர்கள் என்று அழைக்கபடுகின்றனர். அவர்கள் உலோகத்தைக்கொண்டு பலவற்றையும் தயாரிக்க புது புது முறைகளைக் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் செம்பு, வெண்கலம், ஈயம், தகரம் போன்றவற்றையும் உற்பத்திசெஇதனர்.


கி.மு. 2600 - 1900 ஆண்டுகளை செழிப்பாக இருந்த இந்து சமவெளி நாகரிகம் இந்த துணை கண்டத்தில், நகர வாழ்கை நாகரிகத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.இன்றைய இந்தியாவில் உள்ள தோலவீரா, கலிபங்கன், ரூபார், ராக்கிகர்ஹி,லோத்தல் போன்ற நகரங்களும், இன்றைய பாகிஸ்தானிலுள்ள ஹரப்பா, கநேரிவாலா, மொகேஞ்சதாரோ போன்ற நகரங்களும் பழமைவாய்ந்த நாகரிகம் கொண்டிருந்த நகரங்களாக இருக்கின்றன.இந்த நாகரிகத்தில் நகரங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன; சாலையோரங்களில் கழிவுகுழாய் அமைப்புகளும் பல மாடிக்கட்டிடங்களும் இந்த நகரங்களில் இருந்தன.

வேத காலம்

முதன்மைக் கட்டுரை: Vedic period
மேலும் தகவல்களுக்கு: Indo-Aryan and Aryan
வேதகாலத்தின் இறுதி காலத்தில் மேற்கு இந்தியாவின் வரைப்படம்
ஸ்வஸ்திகம்

இந்தோ ஆரியப் பண்பாடும், வேத சமஸ்கிருதத்தின்மூலம் வாய் வழியே கூறப்பட்ட, இந்து மதத்தினருக்கு புனிதமான வேதங்களும் வேத காலத்தின் வேறாக அமைந்திருந்தது.. எகிப்து மேசபோடேமியாவில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளையடுத்து இந்த வேதங்கள் மிகப்பழமை வாய்ந்தவை. இந்த வேத காலம் கி.மு 1500 லிருந்து 500 வரை நீடித்திருந்தது. இது இந்து மதத்திற்கு பலமான அடித்தளத்தை இட்டுக் கொடுத்ததுடன் இந்தியாவின் சமூகத்தின் பண்பாட்டிற்கும் பல நல்வித்துக்களை இட்டது.பெர்ம்பாலக கங்கை கரையோர சமவெளிகளில் வாழ்ந்த ஆரியர்கள் மேற்கிந்தியாவில் வேத நாகரிகம் பரவ காரணமாக இருந்தனர்.


ஆர்யா(ārya, Aryans) என்று தங்களை அழைத்துக்கொண்ட இன்டோ- ஆர்யர்களின் குடிப்பெயர்ர்பினால் ஏற்பட்டது இந்த காலம்.. டாசியஸ் என்று அவர்களுக்கு முன் இந்த பகுதியல் குடியிருந்தவர்களின் நாகரிகத்தை விட இவர்களது நாகரிகம் செம்மையாக இருந்தது.ஆரியர்களின் பூர்விகம் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விஷயாமகும். ஒரு சிலர் அவர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து மையம் கொண்டிருந்தார்கள் என்றும் மற்றும் ஒரு சிலர் அவர்கள் ஏற்கனவேயே இந்தியாவில் இந்து சமவெளி நாகரிகத்திக்கு முன்னரே,குடியிருந்தனர் என்றும் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில வாக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு பேசுகின்றனர்.இந்தியாவுக்கு வெளியே கோட்பாடு ஆரியகள் இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் சென்றார்கள் என்று குறிப்பிடுகிறது.19 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் வந்த ஆரிய படையெடுப்புகள் கோட்பாடுகளை மாற்றி அறிஞர்கள், ஆராய்ச்சிகள் செய்து நம்பக்கூடிய கோட்பாடுகளை கொண்டுவந்துள்ளனர்.


ஹரப்பர்களின் புறக்கணிக்கப்பட்ட அந்த பழைய வேத கால சமுதாயத்தில் குருக்கொள் இனத்தவர் மிகுந்து இருந்தனர்.[20]ரிக் வேதகட்டத்திற்கு பிறகு ஆரிய சமுதாயம் வேளாண்மையிலும் ஈடுபாடு இருந்தது. நான்கு வர்ணபேதங்களையும் அது பின்பற்றியது.இந்து மதத்தின் ஆதாரமாக இருக்கும் வேதத்தை தவிர இராமாயணமும் மகாபாரதமும் கூட இந்த காலத்தில் தான் எழுதப்பட்டன. [21] தோல் பொருள் கண்டுபிடிப்புகள் இந்த இன்டோ-ஆர்யர்களின் வசிப்பு மஞ்சள் களிமண் வர்ணத்தை கொண்ட பானைகள் ஊர்ஜினப்படுத்துகின்றன.[22]

லிச்சாவியின் தலை நகரமான வைஷாலி, உலகிலேயே அர்வாடையடுத்து இருந்த ஒரே குடியரசு நாடாகும்.[52]

குறு[23] ராஜ்ஜியங்கள் கருப்பு, சிகப்பு மற்றும் வர்ணம் பூசிய சாம்பல் நிற பாத்திரங்களைக் கொண்டிருந்தன. மேலும், கி.மு. 1000 ஆண்டில் எழுதப்பட்ட அதர்வன வேதம் இரும்புக் காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இது இரும்பை கருப்பு உலோகம் என்று குறிப்பிட்டுśyāma ayas, இரும்பு காலத்தை பற்றி கூறிய முதல் இந்திய எழுத்து வடிவம் என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டது. இந்த வர்ணம் பூசிய சாம்பல் நிற பாத்திர நாகரிகம் மேற்கிந்தியாவில் கி.மு.1100 விலிருந்து ௬௦௦ வரை நீடித்திருந்தது.[22]இந்த காலத்தின் இறுதி பகுதியில் நாம், ஒரு குல அமைப்பின் மூலம், மகாஜனபதங்கள்என்ற ராஜ்ஜியத்தின் எழுச்சியைப் பார்க்கக் கூடுகிறது.

மகாஜனபதங்கள்

கவுதம புத்தர் பிகாரில் உள்ள போத்கயா என்ற இடத்தில் பல்கு நதிக்கரையில், ஞானம் பெறுவதற்கு முன்னர் அவர் தீவிரமாக துறவறம் மேற்கொண்டார்.
மகாவீரரின் பிறப்பு பற்றியும் ஒரு இலையைப் பற்றிய விவரம் (24 வது சமண மத தீர்த்தங்கரா), கல்ப சூத்ராவிலிருந்து, கி.பி.1375-1400.
பதினாறு மிக வலிமையான ராச்சியங்களையும் குடியரசுகளையும் மகாஜன்பதங்கள் கொண்டிருந்தது.இந்திய கங்கை சமவேளிகலிருந்து பண்டைய இந்தியா முழுவதும் இந்த ஆட்சி நிலவி இருந்தது.
படிமம்:Nalanda University.jpg
நலந்த பல்கலைக்கழகத்திலிருந்த சாரிபுட்ட ஸ்தூபா "எழுதப்பட்ட வரலாற்றில் முதல் மாபெரும் பல்கலைக்கழகம்"
முதன்மைக் கட்டுரை: Mahajanapadas
முதன்மைக் கட்டுரை: History of Hinduism
மேலும் தகவல்களுக்கு: Upanishads, Indian Religions, Indian philosophy, and Ancient universities of India

வேதா காலத்தின் இறுதி காலக் கட்டத்தில் இந்திய துணை கண்டத்தில் நிறைய சிறு ராஜ்ஜியங்களும், நகர மண்டலங்களும் வரத் துவங்கின, என்று பல இந்து, புத்த, சமண மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கி.மு. 500 ஆம் ஆண்டில்,பதினாறு முடியாட்சிகளும் மற்றும் மகாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசும் தோன்றியன. இந்த மகாஜனபதத்தில் காசி, கோசலா,அங்கா,மகதா,வச்சி (வ்ரிச்சி), மல்லா, செடி, வட்சா(வம்சா), குறு,பாஞ்சாலா, மச்சா(மத்ஸ்யா), சுரசேனா,அசக்கா,அவந்தி,கந்தாரா,காம்போஜா ஆகிய நகரங்கள் இந்திய கங்கை சமவெளியில்இன்றைய ஆப்கனிஸ்தானிலிருந்து வெண்கலம் மற்றும் மகாராஷ்டிரம் வரை பரவி இருந்தன.இந்தியாவை நகரப்படுத்தி பார்த்ததில் இந்து சமவெளி நாகரிகத்துக்கு பிறகு வேத காலமே அடுத்த இடத்தை பிடிக்கிறது.ஆரம்பக்கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பல குளங்கள் துணை கண்டத்தின் இந்த பகுதியில் காணப்பட்டன.இதில் சில அரசர்கள் வழி வழியாய் வந்தனர், மேலும் சிலர் அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.படித்தவர்சமஸ்க்ருதத்தில் பேசுகையில் மேற்கிந்தியாவின் பொது மக்கள் பிரக்ரித்தி மொழியில் பேசினார்.கி.மு.500/400 ல்,சித்தார்த்த கவுத்தமர் காலாதிலேயே இந்த பதினாறு ராஜியங்களும் ஒன்று கூடி நான்கு பெரும் அரசுகளாக உருமாறின.அவை வட்சா,அவந்தி,கோசலா,மகதா ஆகும்.[24]


இந்து மதப்படி செய்த சடங்குகள் எளிதானவையாக இல்லாததால் குருக்கொள் குலத்தை சேர்ந்தவர்கள் அவற்றை செய்தனர்.தத்துவங்களைப் புகட்டும் உபநிசதங்கள் பிற்கால வேத காலத்திலும் மகாஜனப்பதங்களின் ஆரம்பக்கலாம்பத்திலும் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. (அதாவது கி.மு. 600 இலிருந்து 400 வரை). இந்திய தத்துவங்களில் தனது ஆதிக்கட்ட்க்தை கொண்டிருந்த உபநிசதங்கள், புத்த மற்றும் சமண மதங்களும் வித்திட்டது. இது சிந்தனைக்கான பொற்காலமாகக் கருதப்பட்டது.கி.மு 537 ல், சித்தார்த்த கவுத்தமர் போதி நிலயை அடைந்து ஞானம் பெற்றவராகக் கருதப்பட்டதால் அவர் புத்தா என்று அழைக்கப்பட்டார்.அதே சமையத்தில் (சமண சமயத்தின் படி 24 வதுதீர்த்தங்கரரான)மகாவீரர் புத்த மதத்தை போல் இருந்த மற்றும் ஒரு சமயத்தை கோட்படுத்தினார். அதையே மக்கள் சமண மதம் என்று அழைத்தனர்.[25] வேதங்களிலும் ஒரு சில தீர்த்தங்கர்களை பற்றிய குறிப்புடன் ஸ்ரமண இயக்கத்தின் முனிகளின் ஒழுங்கமைவு பற்றியும் வரையப்பட்டுள்ளது. [26] புத்தரின் பிரச்சாரங்கள் மற்றும் சமண மதத்தின் கோட்பாடுகள் துறவறம் பற்றி ஊத்தி, அவற்றை பிரக்ரிதி மொழி கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன.இந்து மதத்துடனும், ஆன்மீக கோட்பாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்த இந்த இரு சமயங்களும், சைவ உணவமைப்பு பற்றியும், விலங்குகளிடத்தில் கருனைகாடுதல் பற்றியும், அஹிம்சா வழி பற்றியும் கூறுகின்றன.


சமண மதம் இந்தியாவுக்குள் இருக்கையில் புத்தா மதத்தின் துறவியர்கள் நாடு கடந்து சென்று மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா,திபெத், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் பரப்பினர்.

பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள்

See also: Achaemenid Empire, Greco-Buddhism, Alexander the Great, Nanda Empire, and Gangaridai
கி.மு.323 ல் ஆசியா, நந்தன் மற்றும் கங்கரிடை ராஜ்ஜியங்களை அலேக்சாண்டேரின் ராஜ்ஜியத்துடனும் அவரது தோழமை ராஜ்ஜியங்களுடன் ஒப்பிட்டு பார்த்தல்

இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான வட மேற்கு பகுதிகள் (தற்பொழுதைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்) பெர்சியஅகய்மேனிட் சம்ராஜ்ஜியாதின் போது டாரியஸ் தி கிரேட் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. (கி.மு. 520 ல்). அதற்கு பிறகும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதே சாம்ராஜ்ஜியம் நிலைத்து இருந்தது.[27]கி.மு. 326 ல் அலேக்சாண்டேர் தி கிரேட் ஆசியா மைனரை கைப்பற்றினார். அத்துடன் அகைமேனிட் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி இந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதிகளில் ஒரு முடிவுக்கு வந்தது.அலேக்சாண்டேர் புரு மன்னனை ஹைடாச்பெஸ் போர்களத்தில்(இன்றைய பாகிஸ்தானின் ஜீலத்திற்கு அருகே) வீழ்த்தி பஞ்சாபை கைப்பற்றினார்.[28] பின்னர் அவர் கிழக்கு திசையில் சென்று நந்தர்கள் சாம்ராஜ்ஜியம், மகதா மற்றும் வங்காளத்தின் கங்காரிடை சாம்ராஜ்ஜியத்தை ஒடுக்கினார். அவரது படைகள் மேலும் பலத்த இந்திய படைகளை காலத்தில் சந்திக்க பயந்து போரை ஹைபாசிஸ் (இன்றையபீஅஸ்) என்ற இடத்தில் கங்கை நதி கரையோரம் புறக்கணித்தது.அலேக்சாண்டேர் தனது தளபதி கொயினசுடன் பேசிய பிறகு, திரும்பி செல்ல முடிவெடுத்தார்.


இந்த பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள் இந்திய நாகரிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.பெர்சிய நாட்டின் அரசியல் அமைப்புகள், இந்த துணை கண்டத்தில் மவுரியா சாம்ராஜ்ஜியத்தில் தென்பட்டன.காந்தார( இன்றைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் வட மேற்கு பாகிஸ்தான் பகுதிகள்) என்னும் இடம் இந்திய, பெர்சிய, மத்திய ஆசிய மற்றும் கிரேக்க பண்பாடுகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இது கிரேக்க புத்த மதம் போற கலவையான பண்பாடுகளை நம்முன் நிறுத்தியது. இந்த வகையான மகாயான புத்த மதம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.



மவுரியர்களின் காலம்

முதன்மைக் கட்டுரை: Maurya Empire
மேலும் தகவல்களுக்கு: Chandragupta Maurya, Bindusara, and Ashoka the Great
பேரரசர் அசோகரின் கீழ் மவுரிய சாம்ராஜ்ஜியம்

மவுரிய சாம்ராஜ்ஜியம் (கி.மு.322–185) மவுரிய அரச மரபினால் ஆட்சி செய்யப்பட்டது. அது அரசியல் மற்றும் போர் சார்ந்தவற்றில் மிகவும் வலிமை மிக்கதாகவும், புவியியலில் பரந்தும் இருந்தது. சந்திர குப்தா மவுரியரால் துவங்கப்பட்ட இந்த மவுரிய சாம்ராஜ்ஜியம் பேரரசர் அசோகரின் காலத்தில் தழைத்தோங்கியது.இந்த சாம்ராஜ்ஜியம் மேற்கு பகுதியில் இமாலயத்திலிருந்து கிழக்கு பகுதியில் அஸ்ஸாம் வரை பரந்திருந்தது.வடக்கு பகுதியில் அது பாகிஸ்தானையும் தாண்டி சென்று,பலோசிச்தானையும் (இப்போதைய ஆப்கனிஸ்தானில் ஹெராட்,கந்தகார் மாகாணங்கள்) தன்னுள் அடக்கியது. சந்திர குப்தா மவுரியாவும்பிந்துசாராவும் மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், கண்டறியாத பல குலத்தினர் குடியிருந்த, பெரும் பகுதியான கலிங்கத்தை பேரரசர் அசோகர் வென்றார்.



பழைய மத்திய சமஸ்தானகள்-பொற்காலம்

சங்கா மற்றும் சதவகான சாம்ராஜ்ஜியங்களின் எழுச்சியின் போது பண்டைய இந்தியா.
பண்டைய இந்தியாவின் குஷான சாம்ராஜ்ஜியம்
ராஜதந்திர சோழரின் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி 1030
பதாமி சாலுக்கிய சாம்ராஜ்ஜியம்
முதன்மைக் கட்டுரை: Middle Kingdoms of India

இந்த மத்திய காலம் பண்பாடு வளர்ச்சிக்கு பெயர் போன ஒன்றாகும். சதவாகனர்கள்அல்லது ஆந்திரா என்று அழைக்கப்பட்டவர்கள் மத்திய மற்று தென்னிந்திய பகுதிகளை கி.மு. 230 ல் ஆட்சி செய்தனர். சதவாகன சாம்ராஜ்ஜியத்தில் ஆறாவுதாக வந்த சதகரணி மன்னர் மேற்கிந்தியாவின் சுன்கா சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய பெருமையைப் பெற்றவர் ஆவார்.கவுதமிபுத்ர சதகரணி இந்த சாம்ராஜ்ஜியத்தின் மற்றும் ஒரு மேலார்ந்த மன்னர் ஆவார்.இமாலய பகுதியிலிருந்த குனிண்டா ராஜ்ஜியம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை நிலைத்து இருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் பாதியில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த குஷானர்கள் வாடா மேற்கு இந்தியப் பகுதி மீது படை எடுத்தனர். அவர்களது ராஜ்ஜியம் பெஷாவரிலிருந்து மத்தியகங்கை பகுதியிலிருந்து மற்றும் வங்காள விரிகுடா வரை இருந்தது.அது பண்டைய பாக்ட்ரியா (மேற்கு ஆப்கனிஸ்தான் பகுதி) மற்றும் தென் தஜகிச்தானத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதியை ஆண்ட சாகாவினர் வடக்கு சத்திரப்பதிகளாக கருதப்பட்டனர்.( கி.பி 35-405)இவர்கள் இன்டோ ஸ்கைதியர்களையடுத்தும், மேற்கு பகுதியை ஆண்ட குஷானர்களின் மற்றும் தெற்கு பகுதியை ஆண்ட சாதவாகனர்களின் சமகாலத்திலும் வாழ்ந்தனர்.


மேலும்பாண்டிய ராஜ்ஜியம், சோழ ராஜ்ஜியம், சேர ராஜ்ஜியம், கதம்ப ராஜ்ஜியம், வடக்கு கங்கை ராஜ்ஜியம்,பல்லவ, சாலுக்கிய ராஜ்ஜியம் போன்ற பல சாம்ரஜ்ஜிய்ந்களை தென்னிந்தியா பல கால கட்டங்களில் கொண்டிருந்தது.பல தென்னிந்திய ராஜ்ஜியங்கள் தங்களது எல்லையை கடலுக்கு வெளியேவும் எடுத்து சென்றனர். இது தென் கிழக்கு ஆசியா வரை இருந்தது.இந்த ராஜ்ஜியங்கள் தங்களுக்குள்ளேயும் , மத்திய மாநிலங்களுடன் ஆட்சிக்காக ஏராளமான போர்கள் இட்டன.காலப்ரா எனும் புத்த ராஜ்ஜியம் தற்காலிகமாக சோழ, சேர பாண்டிய ராஜ்ஜியங்களை தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

வட மேற்கு கலப்பு பண்பாடுகள்

இந்திய கிரேக்க ராஜ்ஜியத்தை துவக்கியவர் தேமேற்றியஸ் I "தி இன்வின்சிபில் " (கி.மு.205–171).
See also: Indo-Greek kingdom, Indo-Scythians, Indo-Parthian Kingdom, and Indo-Sassanids

இன்டோ கிரேக்க , இன்டோ ஸ்கைதிய , இன்டோ பார்த்திய , இன்டோ ஸஸநிட் போன்ற கலப்பு பண்பாடுகள் வட மேற்கு இந்திய துனைகண்டத்தில் காணப்பட்டது.sinids. இன்டோ கிரேக்க கலாசாரம் இன்டோ பாக்ற்றிய மன்னர், டெமெத்ரியஸ் கி.மு. 180 ௦ல் படையெடுத்த போது ஆரம்பித்தது.இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்து இருந்தாலும் இதனை ஆண்ட கிரேக்க மன்னர்கள்( ஏறத்தாழ முப்பது) ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டே இருந்தனர்.இந்திய ஐரோப்பிய சாகா ச்கைத்தியரின் பண்பாட்டின் ஒரு கிளை தான் இன்டோ ச்கைத்திய பண்பாடு. இந்த ஸ்கைதியர்கள் தெற்கு சைபீரியாவிலிருந்து, பாக்ட்ரியா, சொக்டியானா, காஸ்மீர், அரசோசியா, கந்தாரா வழி இந்தியா வந்து சேர்ந்தனர். இவர்களது ராஜ்ஜியம் மத்திய இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டு வரை நீடித்து இருந்தது.பகலவா என்று அழைக்கப்பட்டஇன்டோ பார்த்தியர்கள் தற்காலத்து ஆப்கனிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளையும் கந்தாரா பகுதியின் குஷான், குசுலா கட்பிசர் போன்ற குறும் மன்னர்களிடமிருந்து போரிட்டுபெற்றனர்.பெர்சியாவை சார்ந்த ஸஸநிட் ராஜ்ஜியம் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் தற்கால பாகிஸ்தானில் ஆட்சி செய்ததை நாம் அங்கு இருக்கு பெர்சிய கலாச்சாரத்தின்மூலம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதுவே இன்டோ சசானித் கலாச்சாரத்தின் பிறப்பிடம் எனவும் கூறலாம்.

இந்தியாவுடன் ரோமர்களின் வணிகம்

முதன்மைக் கட்டுரை: Roman trade with India
ராம அரசர் அகச்டசின் காசு புதுகோட்டை, தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தியாவுடன் ரோமர்கள் தங்கள் வணிகத்தை கி.பி. 1 ஆரம்பித்தனர். இது அகஸ்டஸ் எகிப்தைகைப்பற்றிய பின்னர் நடந்தது. இந்தியா ரோமை வடக்கு பகுதியிலே, மிகப்பெரிய பங்காளியாகக் கொண்டிருந்தது.


சைசியசின் எக்ஸொடஸ் கி.மு. 130 ல் இந்த வணிகத்தை ஆரம்பித்து வைத்தார், என்று ஸ்ட்ராபோ குறிப்பிடுகிறார்.(II.5.12.[29]) அகஸ்டஸ்காலகட்டங்களில் ஆண்டுக்கு ஒருகாபால் என்ற கணக்கில்,மயோஸ் ஹார்மொசிலிருந்து இந்தியாவரை கப்பல் போக்குவரத்து இருந்தது.இங்கு ஏராளமாக தங்கம் வாணிகத்துக்காக உபயோகிக்கப்பட்டது. பின்னர் இதே தங்கத்தை குஷானர்களும் உருக்கி தங்களது காசுகளை அச்சடிக்க உபயோகித்துக்கொண்டனர்.இதனை பிளினி குற்றம் சாற்றி கூறியுள்ளார்(NH VI.101)


"India, China and the Arabian peninsula take one hundred million sesterces from our empire per annum at a conservative estimate: that is what our luxuries and women cost us. For what percentage of these imports is intended for sacrifices to the gods or the spirits of the dead?"

Pliny, Historia Naturae 12.41.84.[30]


இந்த வணிகப் பாதைகளும் துறைமுகங்களும் கி.பி. 1 நூற்றாண்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

குப்தா அரச மரபு

முதன்மைக் கட்டுரை: Gupta Empire
மேலும் தகவல்களுக்கு: Kalidasa, Aryabhatta, Varahamihira, Vishnu Sharma, and Vatsyayana
மேலும் தகவல்களுக்கு: Meghadūta, Abhijñānaśākuntala, Kumārasambhava, Panchatantra, Aryabhatiya, Indian numerals, and Kama

ஹெப்தலைட் குழுவை சார்ந்த வெள்ளை ஹன்கள், 5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஆப்கனிஸ்தானை பாமியன்என்ற தலைநகரை கொண்டு ஆட்சிசெய்தனர்.இவர்கள் குப்தர்கள் சாம்ராஜ்ஜியம் குலைய காரணமாக இருந்ததால் இவர்களே பொற்காலத்தின் முடிவுக்கும் கரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.என்ன இருந்தாலும் இந்த சர்ச்சைகள் தென்னிந்திய பகுதியையும், டெக்கான் பகுதியையும் எள் அளவும் பாதிக்கவில்லை.

பின்னர் வந்த நாட்களில் எழுந்த மத்திய ராஜ்ஜியங்கள்- தனிசிராப்புடைய காலம்

முதன்மைக் கட்டுரை: Middle Kingdoms of India
Pala Empire under DharmapalaPala Empire under Dharmapala
Pala Empire under Dharmapala
Pala Empire under Devapala

இந்தியாவின் தனிச்சிறப்புடைய காலம் மேற்கு பகுதிகளில், குப்தர்களின் காலத்தில் துவங்கியது, மேலும் இது ஹர்ஷா வர்தனாவின் காலத்திலும் (7 ஆம் நூற்றாண்டு) தொடர்ந்தது. தெற்கு பகுதிகளில் தன்னிச்சிரப்புடன் விளங்கிய ராஜ்ஜியங்கள் விஜயநகர் சாம்ராஜ்ஜியத்துத்டன் ஒரு முடிவுக்கு வந்தது, இந்த கால கட்டத்தில். இதற்கு காரணம் மேற்கிந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டில், நடந்த படையெடுப்புகள் தான்.இந்த காலில் இந்தியாவின் மிக சிறந்த கலைகள் தலையெடுத்தன. இதில் தனிச்சிறப்புடைய வளர்ச்சி காணப்பட்டது. ஆன்மீகம் மற்றும் இந்து, புத்த, மற்றும் சமண மதங்களின் தத்துவ அமைப்புகள் வளர்ச்சியடைந்தன.

டெக்கானின் ராஷ்டிரக்குடர்கள், மாலுவாவின் பிரதிஹாராக்கள், வங்காளத்தின் பாலர்கள் மத்தியமாக வைத்திருந்த இடம் கனவுஜ் முக்கோணம் என்று விளங்கியது.

7 ஆம் நூற்றாண்டில் பெர்கிந்தியாவைகனவுஜின் மன்னன் ஹர்ஷா ஒன்று படுத்தினார். இது குப்தர்களுக்கு பின்னர் நடந்தது.ஹர்ஷாவின் மறைவுக்கு பின்னர் இந்த ராஜ்ஜியமும் குலைந்தது.7 லிருந்து 9 ஆம் நூற்றாந்து வரை ஆட்சிக்காகக மேற்கிந்தியாவில் மூன்று அரச மரபுகள் போட்டியிஇடுக் கொண்டனர். அவர்கள், மாலுவாவின் பிரதிஹாரா(பின்னாளில் கனவுஜ்), வங்காளத்தின் பாலர்கள், மற்றும்டெக்கான் பகுதியின் ராஷ்டிரகுடர்கள் ஆவர்.பலார்கிடமிருந்து பின்னாட்களில் சேனா ராஜ்ஜியம்ஆட்சியை கைப்பற்றியது. அதே சமையத்தில் ப்ரதிஹாரா ராஜ்ஜியம் சிறு சிறு ராஜ்ஜியங்களாக மாறியது.அதன் பின்னர் வந்த ரஜபுதர்கள் இந்தியாவில் தநக்ளது ஆட்சியயை எதோ ஒரு ரூபத்தில், வெள்ளையரிடமிருந்து இந்தியா சுதாந்திரம் பெரும் நாள் வரை சரிவர செய்தனர்.நாம் அறிந்த வரை ரஜபுத ராஜ்ஜியம் முதல் முதலில் ( 6 ஆம் நூற்றாண்டு) ராஜஸ்தானில் தான் இருந்தது. அதற்கும் பிறகு சிறு சிறு ராஜபுத ராஜ்ஜியங்கள் மேற்கிந்தியாவை ஆண்டன.சவுதான் குலத்தை சேர்ந்த ப்ரித்வி ராஜ் சவுதான் என்ர்கின்ர ராஜபுதர்,இஸ்லாமிய சுல்தான்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்டார்.கிழக்கு ஆப்கனிஸ்தானை, மேற்கு பாகிஸ்தானை மற்றும் காஸ்மீரை மத்திய 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை சாகி அரச மரபு ஆட்சி புரிந்தது.ஹர்ஷாவுடன் ஒற்றுமை எண்ணம் மேற்கிந்தியாவில் மறைந்தாலும், இந்த கொள்கை அப்படியே தென் பகுதிக்கு மாறியது.

பின்னர் வந்த காலங்களில் தமிழ் நாட்டின் மேற்கு பகுதியில் சோழ ராஜ்ஜியமும் கேரளாவில் சேர ராஜ்ஜியமும் எழுந்தன.1343 ல் இந்த ராஜ்ஜியங்களின் முடிவு விஜயநகரத்தின் எழுச்சிக்கு வழி வகுத்தது.இந்த தென்னிந்தியா ராஜ்ஜியங்கள் தங்களது ஆட்சிகளை கடல் தாண்டி தென் கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா வரை கொண்டிருந்தனர்.தென்னிந்தியாவில் இருந்த துறைமுகங்கள் இந்து மகா சமுத்திரத்தில் நடந்த வாணிகத்தில் தங்களை ஈடுபடுத்தியிருந்தன. இந்த வாணிகம் வடக்கு பகுதியில் ரோமர்களிருந்து கிழக்கு பகுதியில் தென் கிழக்கு ஆசியா வரை நடைபெற்றது.[31][32] பதினான்காம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களின் வருகை வரை தாய்மொழிகளில் இழிந்த இலக்கியங்களும், கட்டிடக் களையும் செழிப்பாக இருந்தன.இந்து மதத்தை பின்பற்றிய விஜயநகர அரச மரபு (பாமினி ராஜ்ஜியம்) இஸ்லாமிய ஆட்சியருடன் விரோதம் கொண்டது. இந்த இரு அமைப்புகளுக்கு நடுவே நடந்த கருத்து வேறுபாடுகள் ஒன்றன் மேல் மற்றொன்று தீராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.டில்லியைடில்லியிலிருந்து ஆட்சி செய்த சுல்தான்களால் விஜயநகரம் தனது வலுவை இழந்தது.


இந்தியாவின் தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் இந்தியாவின் 55,௦௦௦000 கல்செதுக்கங்களில், 55 சதவிகிதமான கல்வெட்டுகள் தமிழில் உள்ளன என்றும் 60 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளன என்றும் கண்டறிந்துள்ளனர்.[33]

இஸ்லாமிய சுல்தான்கள்

பிஜாபூரிலுள்ள கோல் கும்பாஸ் பைசான்டைன் ஹாகியா சோபியாவை அடுத்து உலகிலேயே இரண்டாவது பெரிய குவிமாடமாகும்
முதன்மைக் கட்டுரை: Islamic Empires in India

இந்தியாவின் வட தோழமை நாடான பெர்சியாவின் மீது ஆரபியர்கள் படையெடுத்த போது, நாகரிகத்தையும், வைர சுரங்கங்களையும், வெளிநாட்டு வாணிகத்திலும் செழித்தோங்கிய இந்தியாவையும் அவர்கள் கண்ணிட்டனர்.ஒரு சிறிய காலத்திற்கு போராட்டங்கள் இருந்தாலும் மேற்கிந்தியாவை இஸ்லாமியசுல்தான்கள் கைப்பற்றினர். நாளடைவில் மேற்கு துணை கண்டத்தையும் தங்களது வசம் கொண்டுவந்தனர்.ஆனால் துருக்கியரின் படையெடுப்புக்குமுன்னர் இஸ்லாமியர்கள் இந்திய கடலோர பகுதிகளுடன் வாணிகம் கொண்டிருந்தனர். முக்கியமாக ச்ல்லவேண்டும் என்றால் அவர்கள் இந்து மகா சமுத்திரம் வழி அராபியாவிலிருந்து கேரளா வந்தனர். இதனால் ஆபிரகாமியமத்திய கிழக்கு மதம் எழுந்தது. இது தென்னிந்தியாவில் புனிதமாகக் கருதப்பட்ட இந்து தருமங்களிலிருந்து வேறு பட்டிருந்தது.பின்பு பாமினி சுல்தான்களும்டெக்கான் சுல்தான்களும் தென்னிந்தியாவில் செழிப்புடன் இருந்தனர்.

டில்லி சுல்தான்கள்

உலகின் மிக உயரிய செங்கல் மசூதிக்கம்பம் , குதுப் மினார்,அடிமை அரச மரபினை சார்ந்த குத்புதின் ஐபகினால் கட்டப்பட துவங்கியது.
முதன்மைக் கட்டுரை: Delhi Sultanate

12 மற்றும் 13 ஆம் நூறாண்டுகளில் துருக்கியர்கள் மற்றும் பாஷ்டுன்கள் ராஜபுதர்களின் கைகளில் இருந்த மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து டில்லி சுல்தான்களாக மாறினர்.[34] அதன் பிறகு வந்த டில்லியை சார்ந்த அடிமை அரச மரபுமேற்கிந்தியாவின்பெரும்பகுதியை குப்தர்கள் போலவே கைப்பற்றியது. அனால்கில்ஜி அரச மரபுமத்திய இந்தியாவில் கைப்பற்றி இருந்தாலும் அவர்களால் இந்த பக்டுதியை ஒன்று படுத்தி கட்டிக் காக்க இயலவில்லை.இந்திய கலாச்சாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சுல்தானியம்.இந்த இந்திய இஸ்லாமிய கலாசாரங்களின் கலப்பு கட்டிடக் கலை, இசை, மதம். உடைகளில் அழியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.நாடோடி இனம் அல்லது முகாம் என்ற பொருளை கொண்ட உருது மொழி (துருக்கிய மொழியில்) டில்லி சுல்தான்கள் காலில் பிறந்தது. இது சமஸ்க்ருத பிரகிருத்தி பெர்சியா, துருக்கி, அரபு மொழியுடன் கலந்ததால் ஏற்பட்டது. டில்லி சுல்தானியும் பெண் ஆட்சியாளரை நியமித்த ஒரு சில ராஜ்ஜியன்களுள் ஒன்று. இது ரசியா சுல்தானை ஆட்சியில் அமர்த்தியது.(1236-1240).


1398 ஆண்டில் துருக்க மங்கோலிய அரசர் தைமூர் டில்லியை சார்ந்த துக்ளக் அரச மரப மன்னரான சுல்தான் நசீருதீன் முஹம்மதின் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல் பட்டார்.[35] சுல்தான் டிசம்பர் 17, 1398 அன்று தோல்வியுற்றார். தைமூர் டில்லியை அடைந்த பின் அதனை கொள்ளையடித்து, அழித்து, துயரமான நிலையில் விட்டுச் சென்றார்.


[தொகு]முகலாய காலம்

17 ஆம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஏறத்தாழ பரப்பளவு.
முகலாயர்களால் கட்டப்பட்ட தாஜ் மஹால்
முதன்மைக் கட்டுரை: Mughal era


1526 ல் தைமூரிலிருந்து தைமூர் மற்றும் செங்கிஸ்கான் வம்சவழி வந்த பபூர், கைபர் பாசின் வழி வந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். இது இரு நூறு ஆண்டுகளுக்கு நீடித்து இருந்தது.[36]1600 களில் முகலாய அரச மரபு இந்திய துணைகண்டத்தின் முக்காவாசி பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தது. 1707 க்கு பிறகு அது தன வல்லாண்மையை இழக்கத் துவங்கியது. அது 1857 இந்திய சுதந்திரப் போர் அல்லது 1857 இந்திய புரட்சி காரணமாக முற்றிலும் தொலைந்து போனது.இந்த காலம் இந்திய வரலாற்றில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்து மக்கள் முகலாயபேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட காலம் இது. பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இந்து மதத்தையும் அதனது கலாச்சாரத்தையும் ஆதரித்தனர்.பபுரின் பேரரான அக்பர் இந்துக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முனைப்பட்டார்.ஆயினும் அவுரங்கழேப் போன்ற மன்னர்கள் இஸ்லாமிய ஆதிக்கத்தை திணித்தனர். இதனால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பெரும் வரிகளைக் கட்டினர்.மவுரிய சாம்ராஜ்ஜியத்தைப்போல பரந்த எல்லைப்பரப்பை கொண்டிருந்த முகலாய சாம்ராஜ்ஜியம்தன வலுவை இழந்தவுடன் அதனை ஈடுகட்ட சிறு சிறு ராஜ்ஜியங்கள் வரத் துவங்கின.செல்வக்க்கொழிப்புடன் இருந்த அரச மரபாக முகலாய சாம்ராஜ்ஜியம் திகழ்ந்தது. 1739 ல்,நதேர் ஷா முகலாய படையை கர்னல் போரில் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து நதேர் ஷா தில்லியைக் கைப்பற்றி அதனுள் இருந்த செல்வத்தை தன்பால் எடுத்துச் சென்றார். அதில் மயில் சிம்மாசனமும் ஒன்றாகும்.[37]


முகலாய காலத்தில் உச்சக் கட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் அமைப்புகள் மிகவும் வலிமையாக இருந்தன, அதன் பின்னர் வலுவிழந்த இந்த முகலாயர்களை வீழ்த்த மராத்திய ராஜ்ஜியங்கள்வீரியம் கொண்டன.முகலாயர்கள் இந்திய கலாச்சாரத்துடன் ஒன்று கூடி செயல்பட்டதே அவர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்ததன் ரகசியமாகும்.இந்த ரகசியத்தை டில்லியின் சுல்தான்கள் அறியாததால் அவர்கள் வெகு விரைவில் ஆட்சியை இழந்தனர்.இந்த கொள்கையை பெரிதும் மதித்து செயல் பட்டவர் பேரரசர் அக்பர் ஆவார்.சமண மதம் தழைத்து இருந்த அந்த காலத்தில் அக்பர் அமரி என்ற ஒன்றை அமல் படுத்தினார்.இந்து விலங்குகளை கொள்ளக்கொட்டது என்ற சட்டமாகும்.அவர் ஜசியா என்ற வரியை ரத்து செய்தார் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு)முகல்லய மன்னர்கள் இந்திய மண்ணரகளுதன் ஒப்பந்தங்களைக் கொண்டனர், இந்திய ராணிகளை மணந்து கொண்டனர், அவர்கள் தங்களது துருக்கிய பெர்சிய கலாச்சாரத்தை இதிய முறைகளுடன் இணைத்து இந்தோ-சாராசெனிக் கட்டிடக் கலையை உண்டாக்கினார்கள்.இந்த வழி முறையை மறந்த நிலையிலும், இஸ்லாமிய ஆதிக்கமும், மக்களை கொடுமைப்படுத்துதலும் ஒன்று சேர்ந்து அவுரங்கசெபின் காலத்திக்கு பிறகு இந்த சாம்ராஜ்ஜியம் வலு இழக்க காரணமாக இருந்தது. அவுரங்கசெப் மற்ற அரசர்களைப் போல் அல்லாது பொதுமக்கள் பெரிதும் விரும்பாத பல கொள்கைகளை கையாண்டார்.

முகலாயர்களுக்கு பின்னர் வந்த ராஜ்ஜியங்கள்

முதன்மைக் கட்டுரை: Maratha Empire
மேலும் தகவல்களுக்கு: Shivaji, Tippu Sultan, Nizam, Ranjit Singh, and Ahmad Shah Abdali
௧௭௬௦ ல் மராத்திய சாம்ராஜ்ஜியம். இந்தியாவிளுருந்த கடைசி இந்து சாம்ராஜ்ஜியம்
ஹர்மண்திர் சாஹிப் அல்லது பொற்கோவில் என்று அழைக்கப்படும் இடம் சிக்கியர் வழிப்பாடு ஸ்தலமாக பெயர்பெற்று விளங்குகிறது.

முகலாயர்களுக்கு பிறகு அவர்களது இடத்தை மராத்தியர் பிடித்தனர். இதே சமையத்தில் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் அதிகரித்தது.சிவாஜி துவக்கிய மராத்திய ராஜ்ஜியம் அவர்காலத்தில் மிகவும் வலிமையாக இருந்தது.18 ஆம் நூற்றாண்டுகளில் பேஷ்வாவின்ஆட்சியில் தனை மராத்திய ராஜ்ஜியமாகமாற்றியமைத்துக்கொண்டது இந்த ராஜ்ஜியம்.1760 ல், இந்த சாம்ராஜ்ஜியம் இந்திய துணைகண்டம் முழுவதிலும் தந்து கோடியை நாட்டி இருந்தது.இந்த மராத்திய விரிவாக்கம் அஹ்மது ஷா அப்டாலி தலைமையின் கீழ்வந்த ஆப்கனிய படையால், மூன்றாம் பானிபெட் போரின் மூலம் தடுக்கப்பட்டது.(1761). கடைசி பெஷ்வாவாகிய , பாஜி ராவ் II, ஆங்கிலேயரால் மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போரில் வீழ்த்தப்பட்டார்.


மைசூர் தென்னிந்தியாவில் ஒரு சிறு ராஜ்ஜியமாகும். இது கி.பி. 1400 ல் வாடியார் அரசு மரபினரால் துவக்கப்பட்டது.வாடியர்களின் ஆட்சி ஹைதர் அலியாலும் அவரது மகன் திப்பு சுல்தானாலும் ஒரு முடிவுக்கு வந்தது.இவர்களது கட்டுப்பாட்டின் கீழ் மைசூர் தொடர்ச்சியான் பல போர்களில் ஈடுபட்டிருந்தது. இது ஆங்கிலேய மராத்தியர்களின் இணை படைகளை எதிர்த்து போரிட்டு, அநேக நாட்களில் இது தனித்து செயல் பட்ட ஆங்கிலேயரை எதிர்த்து பிரெஞ்சு படைகளின் சிறு உதவியோடு போரிட்டது.ஹைதிராபாத் 1591 ல், கோல்கொண்டாவை சேர்ந்த குதுப் ஸாஹியால் ஆக்கப்பட்டது.. ஒரு சிறிய ஆசிப் ஜாவின் கீழ் நடந்த முகலாய ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஹைடிராபாதை சேர்ந்த நிசாம் அழ மலக் 1724 ல் ஆட்சியைப் பிடித்தார்.1724 இலிருந்து 1948 வரை நிசாமிய வம்சாவளியினத்தினரால் ஹைதிராபாத் ஆட்சி செய்யப்பட்டது. ஆங்கிலேய இந்தியாவில் மைசூரும், ஹைதிராபாதும் மன்னர் ஆட்சி செய்த மாநிலங்களாக மாறின.


சீக்கிய மதத்தினை சேர்ந்த ஒரு சிலரால் உண்டான பஞ்சாபிய ராஜ்ஜியம் அரசியல் உருப்புடியாக இருந்து பஞ்சாபை ஆட்சிசெய்தது.இந்த பகுதி ஆங்கிலேயரால் கைபற்றப்பட்ட இறுதிப் பகுதிகளில் ஒன்று.ஆங்கிலேய சீக்கிய போர் சீக்கிய ராஜ்ஜியத்தின் உருகுலைவுக்கு வழி வகுத்தது.18 ஆம் நூற்றாண்டில் கோர்கா, ஷா மற்றும் ரானா ஆட்சியாளர்களால் நேபாளம் உருவாக்கப்பட்டது. அவர்கள், தங்களை பாதுகாத்துக் கொண்டதுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர்.

நாட்டின் குடியேற்றத்தை அமைத்த காலம்

முதன்மைக் கட்டுரை: Colonial India

வாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது.[38] போர்ட்யுகல் மக்கள் கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பேவில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச், ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.[39]1619 ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசெரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ட்யுகல் நாட்டினரின் கோவா, டாமன், டியூ இருந்தன.

ஆங்கிலேயர் அரசாட்சி

முதன்மைக் கட்டுரை: British Raj
British india.png

ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவுடன் 1617 ல், வணிகம் கொள்ள ஆரம்பித்தது[40] நாளடைவில் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி (டி-சூரே ) இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் அவர்ர்களுக்குதஸ்டக்குகள் அல்லது வரியில்லாமல் வங்காளத்தில், 1717 ல், வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார். [41] வங்காள மாகாணத்தை தனது வம்சாவளியின் (டி-பாக்டோ ) மூலம் ஆண்ட, வங்காளத்தின் நவாப் சிராஜ் உட துலாத்ஆங்கிலேயரரின் இந்த முயர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ல் பிளாசே போருக்கு வழி வகுத்தது. இதில்ராபெர்ட் கிளைவின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் படை நவாபை வீழ்த்தியது.நிலங்களை அரசியல் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததில் இதுவே முதல் தரமாகும்.இந்த நிறுவனம் கிளைவை முதல் வங்காள ஆளுநராக 1757 ல் நியமித்தது.[42]1764 ல்பக்சார் போருக்கு பின்னர் வங்காளத்தை ஆட்சி செய்ய முகலாய பேரரசர் ஷா அலாம் II இடமிருந்து அனுமதிப்பெற்றது. இதுவே இந்தியா முழுதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதல் படியாக இருந்தது.3}[113] வங்காளத்தின் வணிகத்தை தான் மட்டுமே கையாண்டது கிழக்கிந்திய நிறுவனம்.அவர்கள் ஒரு புது நிலா வரியை அறிமுகப்படுத்தியது. பெர்மனென்ட் செட்டில்மென்ட் என்ற இதன் வழியாக நிலங்கள் பியூடல் முறையில் கையாளப்பட்டன. (வங்காளத்தின் ஜமீன்தாரை பார்க்க) 1850 முடிவகளில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம்) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அவர்கள் பிரித்து ஆள் என்ற கொள்கையை தீவிரமாகப் பயன்படுத்தினர். அரசர்களால் கட்டுபடுத்தப்பட்ட மாநிலங்களுக்கும், சமுக மற்றும் மத சார்ந்த குழுக்களுக்கும் இருந்த பகைமையை இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.ஆங்கிலேயரின் அரசாட்சியின் பொழுது, அரசாங்கத்தின் சொல்லப்படாத கொள்கைகளால் இந்தியாவில் பஞ்சங்கள் உருவாகின. மிக கொடுமையான பயங்கர பஞ்சம் (கிரேட் பாமின் ஆப் 1876–78), 6.1 மில்லியனிலிருந்து 10.3 மில்லியன் மக்கள் வரை கொன்றது [43]. அதனை தொடர்ந்த இந்தியன் பாமின் ஆப் 1899–1900, 1.25 இலிருந்து 10 மில்லியன் மக்கள் வரை சரித்து.[43] மூன்றாம் பிளக் பாண்டமிக் தனது ஆதீனத்தை சீனாவில் கொண்டிருந்தது. மத்திய 19 ஆம் நூற்றாண்டில் துவங்கிய அது கண்டங்கள் முழுதும் அல்லது இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் மக்களை கொன்றது.[44] இந்த பஞ்சங்களும் வியாதிகளும் அதிகரித்த போதிலும்இந்திய துணைகண்டத்தின் மக்கள் தொகை 1750 ல் 125 மில்லியனாக இருந்து,1941 ல் 389 மில்லியனாக மாறியது 1941.[45]


கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து நடந்த முதல் இயக்கம் 1857 இந்திய கலகம் என்ற பெயர் பெற்றது.இதனை இந்தியன் மியூடினி என்றும் சிபாய் மியூடினி என்றும் சுதந்திரத்தின் முதல் போர் என்றும் அழைப்பர்.ஒரு வருடத்துக்கு பிறகு, மிகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் இந்த கழகத்தை ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.இந்த கலகத்திற்கு மானசீக தளபதியாக விளங்கிய முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனால் முகலாய வம்சாவழியே ஒழிக்கப்பட்டது.இதன் காரணமாக கிழக்கிந்திய நிறுவனத்திலிருந்து பொறுப்பை தன்னிடம் ஆங்கிலேய முடியாட்சி மாற்றி கொண்டது. இது இந்தியாவில் ஒரு குடியேற்ற நாடாகவே பார்த்து. இது நிறுவனத்தின் கீழ் இருந்த நிலங்களை வெளிப்படையாகவும் மற்ற நிலங்களை அரசர்கள் கீழ் மாநிலங்கள் என்ற போர்வை கீழ் மறை முகமாகவும் ஆட்சி செய்தது.ஆங்கிலேயரிடமிருந்து ஆகஸ்ட் 1947 ல் விடுதலைப்பெற்ற இந்தியாவில் மொத்தம் 565 அரசர்களால் ஆளப்பட்ட மாநிலங்கள் இருந்தன.[46]

இந்திய சுதந்திர இயக்கம்

முதன்மைக் கட்டுரை: Indian independence movement
மேலும் தகவல்களுக்கு: Freedom fighters of India
1937 ல் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு
இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரபீந்திரநாத் தாகூர் ஆசியாவிலிருந்து நோபெல் பரிசு பெற்ற முதல் அறிஞராவார்.

பிரிடிஷ் வைஸ்ராய்கு அறிவுரைக்க இந்திய கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். இதுவே இந்திய சுதந்திரத்துக்கும் வடக்கு முறை குடியரசுக்கும் முதல் படியாக இருந்தது.[47] மாநிலவாரியான கவுன்சில்களில் நியமிக்கப்பட்டதன மூலம் கவுன்சிலர்கள் சட்டம் இயற்றுகிற கவுன்சில்களிலும் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.[48]1920 இலிருந்து மோகன்தாஸ் கரம்சந்து காந்தி போன்ற தலைவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான மக்கள் இயக்கங்களை துவக்கி பாடுபட்டனர்.ஆங்கிலேயரை எதிர்த்து படைகளை சேர்த்தார் சுபாஷ் சந்திர போஸ் என்ற மாபெரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்.பகத் சிங்என்ற மற்றும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புரட்சிகள் ஏற்படுத்த காரணமாக இருந்தார்.அவர் ஷகீத் பகத் சிங் என்று அழைக்கபடுகிறார். ஷகீத் என்றால் கொள்கைவாதி என்று பொருள்.வரியைக் கட்ட மறுத்து ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த சுதந்திர போராட்ட வீரரில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர்.ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சி செயல்பாடுகளும் இந்திய த துனைகண்டத்தில் நடைபெற்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற உறுதுணையாக இருந்தன.இதற்கு ஓராண்டிற்கு பிறகு காந்தி சுட்டுக் கொள்ளப் பட்டார்.இருந்தாலும் அவர் நாடு சுதந்திரம் பெற தீவிரமாக உழைத்து வாழ்ந்தார் என்று நாம் பெருமையுடன் கூறலாம்.

சுதந்திரம் மற்றும் பிரிவினை

முதன்மைக் கட்டுரை: Partition of India

சுதந்திரப் போராட்டம் நடந்த சமயத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவே பிரச்சனைகள் எழும்பின.எப்பொழுதுமே சிறுபான்மையினராக இருந்த இஸ்லாமியர்கள் சுதந்திரத்துக்கு பிறகு இருக்கக்கூடிய ஹிந்து அரசாட்சியைக் கண்டு பயந்தனர். அவர்கள் ஆங்கிலேய ஆட்சியை வெறுத்த அதே அளவுக்கு இந்து ஆட்சியையும் வெறுத்தனர்.1915 ல் மோகன்தாஸ் கரம்சந்து காந்தி இருதரப்பினருக்கும் இடையே ஒற்றுமையைக் கொண்டுவர முனை பட்டார். இதுவே அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தர வழியாக இருந்தது. காந்தி கொண்டிருந்த வல்லாண்மையும் அவர் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த திறமையும் அவர் கையாண்ட அஹிம்சா வழி போராட்டமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.இதுவே அவர் தலைவர்களுள் சிறந்தவர் என்ற பெயரையும் வாங்கிக்கொடுத்தது.அவர் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். கையினால் நூற்ற நூலை கொண்டு உடைகளை அணிந்தார். இது ஆங்கிலேயரின் துணி தொழில் துறையை மலிவு படுத்தியது. அவர் கடல் வரை நடையை ஒழுங்கமைத்து, அங்கே சென்று ஆங்கிலேயர்கள் இல்லாமலேயே உப்பு தயாரிக்கலாம் என்றதையும் புலப் பட செய்தார். இந்தியர்கள் அவரி மகாத்மா என்று அழைத்தனர்.அவரை முதலில் அப்படி அழைத்தவர் வங்காள புலவர் ரபீந்திரநாத் தாகூர் ஆவார்.ஆங்கிலேயர்கள் "இந்தியாவை விட்டு ௧௯௪௭ க்குள் வெளியேறிவிடுவோம்", என்று வாக்களித்தனர்.


ஆங்கிலேயரின் இந்தியாவின் அனைத்து எல்லைகளும் 1947 ல் சுதந்திரம் பெற்றன. இது இந்தியா பாகிஸ்தான் மாகாணமாகவும் இந்திய யூநியனாகவும் பிரிக்கப்பட்ட பின்னரே நடந்தது.பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினைக்கு முன்னர் மற்றும் ஒரு கலவரம் இந்துக்களுக்கும், சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்டது. இது இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதாவது பஞ்சாப், வங்காளம் மற்றும் டில்லியில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 500,000 மக்கள் இருந்தனர்.[49] இதே சமயத்தில் வரலாறே ஆச்சரியப் படும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மக்கள் குடியேற்றம் நடந்தது. இதில் 12 மில்லியன் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் புதிதாய் உருவான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர்.


 

0 comments: