இன்றையச் செய்திகள்..! (30.09.10)

 எம்.பில்., தேர்வு விண்ணப்பம்

எம்.பில்., தேர்வு விண்ணப்பம்
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையின் தொலைநிலை கல்வியில் எம்.பில்., (அல் பருவம்) படிப்போருக்கு நவ., 19ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப். 20 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை...
இக்னோ - தேர்வு அறிவிப்பு
மதுரை : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ)யில் டிசம்பரில் நடக்க உள்ள பருவத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி அக். 30. இதன்பின், விண்ணப்பிப்போர் தாமத கட்டணமாக...
தொலை நிலை படிப்புகளுக்கு தேர்வு விண்ணப்பம்
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்சார் (அல்பருவ) படிப்புகளுக்கான தேர்வு டிசம்பரில் நடக்க உள்ளது.  இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்...
கல்வி மையங்களை சிறந்த முறையில் நிர்வகிக்க பயிற்சி
சென்னை : உயர்கல்வி மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள துணைவேந்தர், பதிவாளர், கல்லூரி முதல்வர், இயக்குனர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கல்வி மையத்தை சிறப்பாக நிர்வாகிப்பது தொடர்பாக சிறப்பு...
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க, அதற்கான வெறிதான் முக்கியம்
கோவை :வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க, அதற்கான வெறிதான் முக்கியம். படிக்கும் பள்ளி முக்கியமல்ல. அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தாலும் பெரிதாக சாதிக்க முடியும்,'' என, போலீஸ் கமிஷனர்...
போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு : முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்
புதுடில்லி : போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மூன்றாவது முறையாக தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் என...
கொளுத்தும் வெயிலில் பணியாற்றுபவர்களின் வசதிக்காக கூல் ஜாக்கெட்
திருவனந்தபுரம் : தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்கும் இயந்திரம் அடுத்த மாதம் சோதனை செய்யப்படுகிறது. அதேபோல் கொளுத்தும் வெயிலில் பணியாற்றுபவர்களின் வசதிக்காக கூல் ஜாக்கெட் தயாரிப்பதற்கான...
பண்ணை அமைத்து கறவை மாடு வளர்த்தால் லாபம்
புதுச்சேரி: மாடு வளர்ப்பு இப்போது கடினமானப் பணியாக மாறிவிட்டது. முன்பு மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்தன. இப்போது விளை நிலங்களும் ரியல் எஸ்டேட்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றன. இதைத் தவிர புறம்போக்கு...
சீன தொலைத்தொடர்பு நிறுவனம் தமிழகத்தில் 2,300 கோடி முதலீடு
சென்னை, செப்.29: சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஹுவாய் சென்னை அருகே  2,300 கோடி முதலீட்டில் தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.தமிழக துணை முதல்வர்...
அயல் பல்கலை.களுக்கு அனுமதி கூடாது: ஜயேந்திரர் வேண்டுகோள்
ஸ்ரீபெரும்புதூர்,  செப்.  29:  அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தால் நமது நாட்டின் கலாசாரத்துக்கே பெரிய ஆபத்து ஏற்படும் என்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ...
அக்.7-ல் ராணுவப் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம்
ஈரோடு, செப். 28: ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான முகாம், திண்டுக்கல்லில் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது...
அன்பை வளர்க்கும் திசையில் ஆன்மிகம்: பொன்னம்பல அடிகளார் பேச்சு
திருச்சி, செப். 28: அன்பை வளர்க்க வேண்டிய திசையில் ஆன்மிகம் செல்ல வேண்டும் என்றார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
காவலர் பணிக்கு அக். 4-ம் தேதி உடல் திறன் தேர்வு
வேலூர், செப்.28: வேலூரில் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் சிறைக் காவலர்களுக்கு உடற்தகுதி திறன் தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் சிறைக் காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்பு...
தேசிய அடையாள அட்டை: பிரதமர் தொடங்கி வைத்தார்
மும்பை, செப்.29- தேசிய அடையாள அட்டை திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் தெம்ப்லி என்னும் பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ்...

எம்.பில்., தேர்வு விண்ணப்பம்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையின் தொலைநிலை கல்வியில் எம்.பில்., (அல் பருவம்) படிப்போருக்கு நவ., 19ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப். 20 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை பூர்த்தி செய்து அக். 19 க்குள் வழங்க வேண்டும். அக். 26 வரை 100 ரூபாய் அபராதத்துடன் வழங்கலாம். விண்ணப்பங்களை தேர்வாணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்திலோ (www.mkudde.org) மூலம் பெற்றோ அனுப்ப வேண்டும். தபாலில் அனுப்புவோர் 15 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரியிட்ட தபால் கவரை இணைத்து அனுப்ப வேண்டும். கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இக்னோ - தேர்வு அறிவிப்பு

மதுரை : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ)யில் டிசம்பரில் நடக்க உள்ள பருவத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி அக். 30. இதன்பின், விண்ணப்பிப்போர் தாமத கட்டணமாக 300, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் என செலுத்த வேண்டும்.  மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், கீழக்கரை, சாத்தூர், நெல்லை, ஆய்க்குடி, தூத்துக்குடி, ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை மையங்களில் தேர்வுகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, "இயக்குனர், இக்னோ மண்டல மையம், சிக்கந்தர்சாவடி, அலங்காநல்லூர் ரோடு, மதுரை' என்ற முகவரியில் நேரிலோ, 0452- 238 0387, 238 0733 ல் தொடர்பு கொண்டோ அறியலாம். இத்தகவலை மண்டல இயக்குனர் எம்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தொலை நிலை படிப்புகளுக்கு தேர்வு விண்ணப்பம்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்சார் (அல்பருவ) படிப்புகளுக்கான தேர்வு டிசம்பரில் நடக்க உள்ளது.  இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அக்., 1 முதல் வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பட்டப் படிப்பு மாணவர்கள் அக். 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 100 ரூபாய் அபராதத்துடன் அக்., 22 வரை அனுப்பலாம். இளங்கலை தேர்வு டிச. 19ம் தேதியும், முதுகலை, தொழிற் படிப்புகள் டிச. 27ம் தேதியும் துவங்குகிறது.  தேர்வுக்கான விண்ணப்பங்களை தீதீதீ.ட்டுதஞீஞீஞு.ணிணூஞ் மூலம் பெற்றும் அனுப்பலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், தேர்வாணையர் அலுவலகத்திற்கு மனுவுடன் 15 ரூபாய் ஸ்டாம்பு ஒட்டிய தபால் கவரையும் அனுப்ப வேண்டும் என கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

கல்வி மையங்களை சிறந்த முறையில் நிர்வகிக்க பயிற்சி

சென்னை : உயர்கல்வி மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள துணைவேந்தர், பதிவாளர், கல்லூரி முதல்வர், இயக்குனர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கல்வி மையத்தை சிறப்பாக நிர்வாகிப்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) திட்டமிட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர்கல்வி மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களது திறமைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய யு.ஜி.சி., ஒரு நிபுணர் கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் 480 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு கோடி மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்வி பயிலும் வயது உடையவர்களில், தற்போது 13 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயில்கின்றனர். இதனை 25 சதவீதமாக உயர்த்த நம்நாட்டில் மேலும் 500 பல்கலைக்கழகங்கள், 35 ஆயிரம் கல்லூரிகள் தேவைப்படுகிறது. ஒரு பகுதியின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில், உயர்கல்வி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயர்கல்வியின் திட்டமிட்ட மேம்பாட்டில், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களில் பங்கு முதன்மையானது. அவர்கள் திறம்பட செயல்படாவிட்டால், கல்வி மேம்பாட்டின் வேகம் குறையக்கூடும்.

உயர்கல்வி மையங்களை நிர்வகிப்பதில், திட்டமிடுதல் குறித்து விழிப்புணர்வு இல்லாமை, திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகள், நிதி நிர்வாக திறன்களில் உள்ள குறைபாடுகள், முடிவெடுக்கும் திறன், பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை, முறையற்ற மேலாண்மை உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ளன. உயர்கல்வி மையங்களில் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். முதல் குழுவில், துணைவேந்தர், கல்வி மைய இயக்குனர், இணை துணைவேந்தர் மற்றும் ரெக்டர் ஆகியோர் இடம் பெறுவர். இரண்டாம் குழுவில், கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இடம் பெறுவர். இந்த இரு குழுக்களுக்கும், தலைமைப் பண்பு மேலாண்மை, மாற்றங்களை நிர்வகிப்பது, கல்வி மையங்களில் ஐ.டி., பயன்பாடு ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

மூன்றாவது குழுவில், பதிவாளர், நிதி அதிகாரி, துறைகளின் இயக்குனர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, நூலக அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெறுவர். இக்குழுவினருக்கு, பொது நிர்வாகம், நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ், சொத்து மேலாண்மை, அணி மேலாண்மை, நிர்வாகத்தில் ஐ.டி., பயன்பாடு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். நான்காவது குழுவில், துணை பதிவாளர், உதவி பதிவாளர், சூப்பிரன்ட், பிரிவு அதிகாரி, கல்லூரிகளில் துறைத் தலைவர்கள், கணக்கு அதிகாரி, தனிச் செயலர், தனி உதவியாளர் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இக்குழுவினருக்கு, செயல்பாட்டுத் திறமை, அக்கவுண்ட், சட்டம், ஸ்டோர் மேலாண்மை, ஐ.டி., மற்றும் மென்திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். ஐந்தாவது குழுவில், உதவியாளர், ஸ்டெனோகிராபர், கிளார்க் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இக்குழுவினருக்கு, செயல்பாடு மற்றும் மனப்பான்மை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சிகள் மூன்று நாட்கள் முதல் நான்கு வாரங்களில் வழங்கப்படலாம். இவ்வாறு நிபுணர் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் கல்வி மையங்களின் இயக்குனர்களின் கருத்துக்களை கேட்டு, யு.ஜி.சி., சார்பு செயலர் வீணா நய்யார் கடிதம் எழுதியுள்ளார். கருத்துக்கள் பெறப்பட்ட பிறகு, கல்வி மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும்.