தனியார் ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்: ஆளுநர் பேச்சு

புதுச்சேரி, செப். 25: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் மகளிர் ஆணையம் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் இக்பால் சிங் கூறினார்.


÷புதுச்சேரி அரசு மகளிர் ஆணையம் மற்றும் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் கலை என்றும் தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு புதுச்சேரி கூட்டுறவு வங்கி அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.
÷இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநர் டாக்டர் இக்பால் சிங் பேசியது:
÷மகளிர் ஆணையம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றுப்படுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது. மாணவர்கள் நலன் கருதி இதுபோன்ற பயிற்சிகளை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் மகளிர் ஆணையம் கொடுக்க வேண்டும் என்றார்.
÷அமைச்சர் கந்தசாமி பேசியது: மகளிர் ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூ.9 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 சதவீதம் மட்டும் திருப்பி கட்டப்பட்டுள்ளது. மீதி வரவில்லை. அதிகாரிகள் மனசாட்சியுடன் பணியாற்றி எல்லா நிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றார்.÷மகளிர் ஆணையத் தலைவி கமலினி, கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

0 comments: