இந்திய விமானப் படையில் குறுகிய கால பைலட் பணி அறிவிப்பு

உலகின் விமானப் படைகளில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் குறுகிய கால நிலை பைலட் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண், பெண் என்ற இருபாலரும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கான பயிற்சி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
கல்வித் தகுதி         
விமானப் படையின் ப்ளையிங் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 3 ஆண்டு படிக்கக் கூடிய பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகளை முடித்தவர்களும், இந்த ஆண்டு பட்டப் படிப்பின் இறுதித் தேர்வை எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பு
விமானப் படையில் குறுகிய கால நிலை பிளையிங் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க 01/07/2011 அன்று 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02/07/1988 முதல் 01/07/1992க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். முழு விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
உடற் தகுதி
விமானப் படையில் குறுகிய கால நிலை பிளையிங் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க சில குறைந்த பட்ச உடற் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உயரம் குறைந்த பட்சம் 162.5 செ.மீட்டரும் இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். தூரப் பார்வை கொண்டவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். கிட்டப் பார்வை கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. லாசிக் லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்து கண் பார்வையை சரி செய்து கொண்டவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும். 
தேர்ச்சி முறை
விமானப் படையில் குறுகிய கால நிலை பிளையிங் பைலட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பைலட் ஆப்டியூட் பேட்டரி டெஸ்ட் என்ற தேர்வை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே இந்தத் தேர்வை மேற்கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. தேர்ச்சி முறை 2 கட்டங்களாக இருக்கும். முதலில் எழுத்துத் தேர்வும், அதற்கு அடுத்த நாளில் பெர்சனாலிடி டெஸ்டும் நடத்தப் படும். இந்த இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாக முடித்தவர்கள் இந்திய விமானப் படை நடத்தும் மருத்துவப்பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை
விமானப் படையில் குறுகிய கால நிலை பிளையிங் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களையும் இணைப்பதோடு, இதர இணைப்புகளையும் சேர்க்க வேண்டும். முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 04/10/2010க்குள் கிடைக்குமாறு பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : 
POST BAG NO.001, NIRMAN BHAWAN POST OFFICE, NEW DELHI & 110 106.
இணைய தள முகவரி :"www.careerairforce.nic.in"


 

0 comments: