"விக்கிபீடியா' அலுவலகம் இந்தியாவில் அமைகிறது

மும்பை : உலகளவில் தேடுபொறிகளில் இரண்டாம் இடம் வகிக்கும் "விக்கிபீடியா' விரைவில் இந்தியாவில் தனது அலுவலகத்தைத் துவங்க உள்ளது. உலகளவில் தேடுபொறிகளில் (சர்ச் இன்ஜின்) கூகுள் முதலிடம் வகிக்கிறது. அதற்கடுத்து, 37 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற விக்கிபீடியா இரண்டாமிடம் வகிக்கிறது. இந்தியாவில் விரைவில் தன் அலுவலகத்தைத் துவக்க விக்கிபீடியா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விக்கிபீடியா பவுண்டேஷனின் உலக வளர்ச்சி தலைமை அதிகாரி பேரி நியூஸ்டெட் கூறுகையில்,"இதுவரை எங்கள் "சர்வர்' அமெரிக்காவில் தான் இருக்கிறது. மற்றொரு "சர்வரை' இந்தியாவில் நிறுவ திட்டமிட்டுள்ளோம். அனேகமாக, மும்பை, டில்லி அல்லது பெங்களூரில் அந்த சர்வர் அமையக்கூடும். ஏற்கனவே இந்தியாவில் எங்கள் அலுவலகத்தைத் துவங்குவதற்காக, கர்நாடகா அறக்கட்டளை சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறோம். அதனால் விரைவில் இந்தியக் கிளை துவக்கப்பட்டு விடும்' என்றார். 

 

0 comments: