தேசிய திறனறி தேர்வு: "பிட்ஜி' மாணவர்கள் சாதனை

சென்னை: தேசிய திறனறித் தேர்வில், "பிட்ஜி' மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னை நுங்கம்பாக்கம், "பிட்ஜி' மைய நிர்வாகிகள் கூறியதாவது: "பிட்ஜி' மையம், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சியளித்து வருகிறது. இந்த ஆண்டு, எங்களிடம் பயின்ற மாணவர்களில், 178 பேர் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்று கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும், தமிழக அளவில் முதல் மூன்று இடங்களையும், எங்கள் மாணவர்களே பெற்றுள்ளனர். அவர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியை நடத்துகிறோம். எங்களிடம் ஆறாம் வகுப்பு முதல் பயிற்சியில் சேரலாம். இதற்கு நுழைவுத் தேர்வும் உண்டு. வார விடுமுறை நாட்களிலும், மாலை வேளைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தரமான பயிற்சி என்பதால், அதற்கேற்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி.,யில் பயின்றவர்களே அதற்குரிய பயிற்சியை அளிக்கின்றனர். மாணவர்களிடையே ஆராய்ச்சி படிப்பையும் ஊக்குவிக்கிறோம். இந்த ஆண்டு, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 80 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பயிற்சி வழங்கும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், முதல் ஐந்து இடங்களை பிடித்த, "பிட்ஜி' மாணவர்கள் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

 

0 comments: