ஒற்றை பெண் குழந்தை முதுநிலை மாணவியருக்கு மாதம் 2,000 ரூபாய் யு.ஜி.சி., கல்வி உதவித்தொகை

சென்னை : குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பல்கலைக் கழக மானியக்குழு 2005 - 06ம் ஆண்டு முதல், முதுநிலை படிப்பில் சேரும் குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெறும் மாணவி, குடும்பத்தில் ஒரே குழந்தையாக(பெண்ணாக) இருக்க வேண்டும். இத்திட்டத்தில், மாணவியருக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு (ஆண்டிற்கு 10 மாதங்கள் வீதம், 20 மாதங்கள்) இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த ஆண்டு மொத்தம் 1,200 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியருக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது  பத்திரிகைகளில் விளம்பரம் வெளியான நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை, தீதீதீ.தஞ்ஞி.ச்ஞி.டிண என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். உதவித்தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தையும் இணையதளத்தில் பெறலாம். இவ்வாறு யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

 

0 comments: