சுசீல் குமார் பயிற்சியாளருக்கு விருது

புது தில்லி, செப்.25: உலக மல்யுத்த சாம்பியன் சுசீல் குமாரின் பயிற்சியாளர் யஷ்விர் சிங், இந்த ஆண்டின் சர்வதேச சிறந்த மல்யுத்த பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இதன் மூலம் சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் சிறந்த பயிற்சியாளர் விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் யஷ்விர்.
  ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் அண்மையில் நடந்த உலக மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சுசீல் குமார் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் சுசீல்.
இந்தப் போட்டியின் போது சுசீலின் பயிற்சியாளராக மாஸ்கோ சென்றிருந்தார் யஷ்விர் சிங்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்துடன் (டபிள்யூ.எப்.ஐ.) நடந்த ஆலோசனைக்குப் பிறகு, சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் 2010-ம் ஆண்டுக்கான சிறந்த பயிற்சியாளராக யஷ்விர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் முர்சியா நகரில் டிசம்பர் மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறந்த பயிற்சியாளர் விருது யஷ்விருக்கு வழங்கப்பட உள்ளது என டபிள்யூ.எப்.ஐ. தலைவர் ஜி.எஸ். மன்டேர் சனிக்கிழமை தெரிவித்தார்

 

0 comments: