"யுத்தா 10' தேசிய கருத்தரங்கம்


திருவள்ளூர், செப். 24: கோஜன் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையான மேகிஸ்மோ சார்பில் "யுத்தா 10' என்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை கல்லூரித் தாளாளர் பிருந்தா நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இயந்திரவியல் துறைத் தலைவர் கே.தமிழரசன் வரவேற்றார். கல்லூரித் தலைவர் ஜி.நடராஜன் சிறப்புரையாற்றினார். டிவிஎஸ் நிறுவன பொதுமேலாளர் சுயம்பு தொடக்கவுரையாற்றினார்.
தமிழகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த 55 கல்லூரிகளிலிருந்து 160 மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அவற்றில் 40 கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
கோவையைச் சேர்ந்த பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி மாணவர் மஞ்சுநாதன் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்கு முதல் பரிசு, மதுரை சேது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மாணவர் பிரித்திவிராஜ் குழுவினரின் ஆய்வுக் கட்டுரைக்கு இரண்டாம் பரிசு, சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் வி.எஸ்.திலீபனின் ஆய்வுக் கட்டுரைக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தன.
பரிசளிப்பு விழாவில் "யுத்தா 10' தலைவர் எம்.மனோஜ் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் இரா.ஏ.பாபு தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி விழா மலரை வெளியிட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்

 

0 comments: