இந்திய மருத்துவ படிப்புக்கான மறு கவுன்சிலிங்

சென்னை: இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான மறு கவுன்சிலிங், வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இத்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர, கடந்த 6 முதல் 9ம் தேதி வரை நடந்த கவுன்சிலிங்கிற்கு பின், மாணவர்கள் சேராததால் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப மறு கவுன்சிலிங், வரும் 27ம் தேதி சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறும். முந்தைய கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், மறு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். மறு கவுன்சிலிங்கிற்கு வருபவர்கள், தற்போது படிக்கும் கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய சான்றிதழ் பெற்று வர வேண்டும். மேலும் விவரங்களை
' www.tnhealth.org ' இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

0 comments: