மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்து மகிழும் நிகழ்ச்சி

சென்னை : மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்து மகிழும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சென்னையில் இயங்கி வரும், "டவுன்ஸ் சின்ட்ரோம் பெடரேஷன் ஆப் இந்தியா' எனும் அமைப்பின் சார்பில், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்து மகிழும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து 1,200 குழந்தைகள் மற்றும் 300 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியாளர் கண்ணன் புகழேந்தி, "ஏரோ பிட்ஸ்' எனும் உடற்பயிற்சியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை டாக்டர் பிரியா சந்திரசேகர் வழங்கினார்."ஸ்பெக்ட்ரம் ஐ கேர்' மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்து இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நடனப் பயிற்சி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி நிறைவில், குழந்தைகளின் அணிவகுப்பு நடக்கிறது.இந்நிகழ்ச்சி குறித்து, "சென்னை டவுன்ஸ் சின்ட்ரோம்' அமைப்பின் இயக்குனர் ரேகா ராமச்சந்திரன் கூறும் போது, "மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.இந்த குழந்தைகளை பெற்றோரே ஒதுக்கும் நிலை இருப்பதால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறோம். இவர்களில் 15 பேர், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தயார்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

 

0 comments: