"வாழ்வில் ஒவ்வொருவரும் தன்மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்'

கோவை: "வாழ்வில் ஒவ்வொருவரும் தன்மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்' என, பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசினார். கோயம்புத்தூர் ரோட் டரி கிளப் சார்பில் "தலைமை தாங்க வா' என்ற தலைப் பில், இந்திய தொழில் வர்த் தக சங்க அரங்கில் சொற் பொழிவு நடந்தது. பேராசிரியை பர்வீன் சுல்தானா பங்கேற்று பேசியதாவது: காலம் கண் போன்றது; நேரம் பொன் போன்றது. காலத்தின் அருமையை அறிந்து வாழ வேண்டும். "நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று திட்டத்தை தள் ளிப் போடக்கூடாது. இன் றைக்கு செய்ய வேண்டியதை அன்றன்றே செய்ய கற் றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை ஒப்பிட்டு எப்போதும் வாழக்கூடாது. தனக்குத்தானே முழு நம்பிக்கையுடன் வாழவேண்டும். செய்யும் பணியில் "தானே தலைமை' என எண்ணிக்கொள்ள வேண்டும். யாரும் நம்மை அலட்சியப்படுத்த இடம் அளிக்க கூடாது. முட்டையை வெளிப்பகுதியில் உடைத் தால் மரணம்;உள் பகுதியிலிருந்து உடைத்தால் ஜனனம். தனக்குள் திறமையை வெளிக்கொணர வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்வில் சாதனை புரிய முடியும். மற்றவர்களை முன்மாதிரியாக வைத்து வாழவோ, அவர்களை புகழ்ந்து தன்னை தாழ்மை படுத்தவோ கூடாது. தன் வாழ்வுக்கு தானே பொறுப்பேற்க வேண்டும். துறைமுகத்தில் இருக்கும் கப்பல், பாதுகாப்பாகத்தான் இருக்கும். ஆழ்கடல் பகுதியின் வழியே சென்று இலக்கை அடையும் போது தான் அதன் முழு பயனும் அனைவருக்கும் கிடைக்கிறது. வெற்றி நம் கையில் தான் உண்டு. ஒவ்வொருவரும் பெற முயற்சிப்பதே வாழ்க்கையின் சாதனை. இவ்வாறு பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசினார். 
கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் சவுந்தரராஜன், கங்கா மருத்துவமனை டாக்டர் பால வெங்கட் உட்பட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  


 

0 comments: