ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்: ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் எம்பி.

மதுரை, செப். 25: எந்த வேலைக்கு செல்லப்போகிறோம் என்ற திட்டத்துடன் கல்வி கற்று அதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கல்லூரி மாணவியரிடம் அறிவுறுத்தினார் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் எம்பி.


    மதுரையில் சனிக்கிழமை இலவச கட்டாயக் கல்வி சட்ட தமிழாக்க நூலை வெளியிட்டு அவர் பேசியது:
   உலகில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் அதிகம் பேர் இருப்பது போல் வேலை வழங்கத் தயாராக உள்ள நிறுவனங்களும் அதிக அளவில் இருக்கின்றன.  இதில் வேடிக்கை என்னவென்றால் வேலைக்கு தகுந்த திறன் படைத்தவர்கள் கிடைப்பதில்லை. எம்ஏ படித்தாலும் பிஎச்டி படித்து இருந்தாலும் வேலைவாய்ப்பைத் தேடிச் செல்லும் போது தோல்வியை சந்திக்கின்றனர். பள்ளிகளில் கற்பது என்பது வெறும் அடிப்படை கல்விதான்.
   அதற்கு மேல் படிக்கும் போது நாம் எந்த துறைக்குப் போக வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற கல்வியைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ஆளுமைத்திறன் என்பதும் அவசியம். இங்கு வெளியிடப்பட்டுள்ள இலவச கட்டாயக்கல்வி சட்டம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
   அதற்கான முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளலாம். வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில்தான் 19 கோடி குழந்தைகளுக்கு இலவச கல்வியும் மதிய உணவும் அளிக்க வேண்டியிருககிறது. கிராமங்களில் குழந்கைளைப் பெற்று சிறுவயதில் வேலைக்கு அனுப்பி விடுகின்றனர்.  
   இதனால் படிப்பறிவில்லா குழந்தைகள் எண்ணிக்கை பெருகிவிடுகிறது. இவர்கள் படிப்புக்காக கல்விக்கான சேவை வரி வசூலித்து அதை கல்விக்காக செலவிடுகிறது மத்திய அரசு. இப்படி ஆண்டுக்கு | 20 ஆயிரம் கோடி இலவச கல்விக்காக செலவிடப்படுகிறது என்றார்.
  மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் முதல் நூலை பெற்றுக்கொண்டார். மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் செயலர் சி.பாக்கியலட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

0 comments: