ஆராய்ச்சிபட்டம் பெறுவதில் பெண்கள் பின்னடைவு: ஆய்வுத் தகவல்

சென்னை: ஆண், பெண் சமம் இருவருக்கும் சமமான கல்வி அளிப்போம் என்பது அனைவரின் கொள்கை. அவைகள் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மட்டுமே சாத்தியமாகிறது. ஆனால் அவைகள் குறிப்பிட்ட எல்லையோடு நின்றுவிடுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பட்ட மேற்படிப்பிற்கு பின்னால் தொடரும் பி.எச்.டி., எனப்படும் ஆரசாய்ச்சி சம்பந்தமான படிப்பில் ஆண்களை காட்டிலும் பெண்கள் மிகவும் பின் தங்கியிருப்பதாக பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களை மட்டும் இவை கணக்கில் கொண்டுள்ளது. அதன்படி 1998முதல் 2007-ம் ஆண்டு வரையில் 76.2 சதவீத ஆண்கள் பி.எச்.டி., முடித்துள்ளபோது பெண்கள் 23.8 சதவீதம் மட்டுமே அதே கல்வியை முடித்துள்ளனர். தேசிய அளவில் இதன் ஒப்பீடு ஆண்கள் 66.4 சதவீதம், பெண்கள் 33.6 சதவீதமாகும். போரசிரியர்கள் அனிதா குருப் மற்றம் ஜகதீஷ் அரோரா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள 261 பல்கலையில் இருந்து 45 ஆயிரத்து 561 பிஎச்டி செய்யும் மாணவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டனர். இதற்காக இவர்கள் இன்பெலிப்னெட்என்றழைக்கப்படும் இன்பர்மேஷன் மற்றும் லைப்ரரி நெட்ஒர்க் மையத்தின் துணையோடு யூஜிசியின் உதவி மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் மகாராஷ்டிரா மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் 41.9 சதவீத பெண்கள் ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் காட்டாததை கண்டறிந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு கல்லூரி படிப்பை முடித்தஉடன் ஆசிரியர் பணிக்கு செல்வதே குறிக்கோளாக உள்ளது. மேலும் காலாச்சாரமும் அனுமதிக்க மறுக்கிறது. பெண்கள் தங்களுக்கு என்று ஒரு நிரந்தர வேலை கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கும் போது அவைகள் கிடைத்தஉடன் ஆராய்ச்சி படிப்பு குறித்து சிந்திப்பதில்லை, மேலும் பெண்கள் ஆராய்ச்சி படிப்பை தொடருவதற்கு சிறப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறைவாக காணப்படுவால் தயங்குகின்றனர். என ஐஐடிசென்னை மையத்தின் சோசியல் சைன்ஸ்துறை சேர்ந்த பிரேமா ராஜகோபாலன் கூறினார். மேலும் பெணகளின் தேவைகள் மற்றும் பெண் பயிற்றுனர்கள், ஆகியோரை அமைத்து பெண்களுக்கான பிரச்னைகள் குறித்து அலசி ஆராய்ந்து தீர்டு கண்டால் மட்டுமே பெண் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யமுடியும் என கூறுகிறார் பேராசிரியர் பி.கே. அனிதா.

 

0 comments: