தொலைதூரக் கல்வியில் ஐந்தாண்டு எம்.பி.ஏ., பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை : "" வரும் கல்வியாண்டு முதல் தொலைதூரக் கல்வியில் ஐந்தாண்டு எம்.பி.ஏ., பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும், '' என சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: சென்னை பல்கலை தொலைதூரக் கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கையை எளிமைப்படுத்தும் வகையில், கடந்த ஜூன் மாதம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மையம் துவக்கப்பட்டது. இந்த மையம் மூலம், நாள் ஒன்றுக்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வியில் சேருகின்றனர்.
தொலைதூர கல்வியில் எம்.பி.ஏ., பட்டப்படிப்பில், "மார்க்கெட்டிங், பைனான்ஸ், இன்சூரன்ஸ்' உட்பட 12 பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 60 சதவீத மாணவர்கள் எம்.பி.ஏ., பட்டப்படிப்பையே தேர்வு செய்கின்றனர். தொலைதூரக் கல்வி பயிலும் சென்னை பல்கலை பட்டதாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு 20 சதவீத கட்டண விலக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு முழு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டு முதல் ஐந்தாண்டு ஒங்கிணைந்த எம்.பி.ஏ., பட்டப்படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு, "எக்சிகியூட்டிவ்' எம்.பி.ஏ., ஆகிய பட்டப்படிப்புகள் துவக்கப்பட உள்ளன. இந்த பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளை தமிழிலும் எழுதலாம். இவ்வாறு திருவாசகம் கூறினார்.

 

0 comments: