இணையத்தில் இடைநிலை ஆசிரியர் பதிவு

திருப்பூர், செப்.25:   இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்புப் பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


÷இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர் கல்வித் தகுதியைப் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வரும் திருப்பூர் மாவட்ட பதிவுதாரர்களின் பெயர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
÷இடைநிலை ஆசிரியர் பதிவு செய்தவர்கள் www.tiruppur.tn.nic.in​என்ற இணைய தள த்தில் தங்களது பதிவு மூப்பு, பிறந்த தேதி, கல் வித் தகுதி மற்றும் முகவரி போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இணைய தளத்தில் உரிய விவரங்கள் இல்லாதபட்சத்தில் அனைத்து சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் அக்.1ல் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

 

0 comments: