சாதாரண வெளிச்சத்திலும் எக்ஸ்ரே எடுக்கலாம்

வாஷிங்டன்: நாம் பார்த்தவரைக்கும் அனைத்து மருத்ததுவமனைகளிலும் எக்ஸ்ரே எடுப்பதற்கு தனி அறை ஒன்று உண்டு அது கும்மிருட்டாக இருக்கும். உலகம் முழுவதும் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பார்முலா இதுவாகும். அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் பாரீஸ் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள். விளக்கு வெளிச்சத்திலும் எக்ஸ்ரேயை எடுக்க முடியும் என்பதே அது. இது குறித்த ஆய்வு நடத்திய இயற்பியல் மற்றும் வேதியியல் உயர் கல்வித்துறை அமைப்பை சேர்ந்த சில்வெய்ன் ஜிகான் மற்றும் அவருடன் பணிபுரிவோர் நடத்திய ஆய்வில் மேற்கண்ட முடிவை கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஜிங்க்ஆக்ஸைட் கலந்த பசுமை நிற லேசரை சாதாராண வெள்ளைபெயிண்ட்டில் ஊடுருவ செய்து காண்பித்த போது சாதாரண தலைமுடியை மிக துல்லியமாக படம்பிடித்ததை காண்பித்தனர். இந்த கண்டுபிடிபிற்கு டிரான்மிசன் மேட்ரிக்ஸ் என பெயரிட்டுள்ளனர். மேலும் அனைத்து பொருட்களையும் துல்லியமாக படம்பிடிக்கும் வகையில் இந்த கருவியை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

 

0 comments: