லால்குடி ஜெயராமன் உள்ளிட்ட 6 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி ரத்னா விருது

புது தில்லி, செப். 28: பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன், பரதநாட்டியம் மற்றும் குச்சுபுடி கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு சங்கீத நாடக அகாதெமியின் உயரிய விருதான "அகாதெமி ரத்னா' விருது வழங்கப்பட்டது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2009-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கி கெüரவித்தார்.
இயல், இசை, நாடகத் துறையில் பிரபலமாக விளங்குபவர்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இசை மேதைகள் பண்டிட் ஜஸ்ராஜ், கிஷோரி அமோன்கர், நடிகர் ஸ்ரீராம் லாகூ, சம்ஸ்கிருத நாடக மேதை கமலேஷ் தத் திரிபாதி ஆகியோருக்கு அகாதெமி ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு 3 லட்சம் ரொக்கப் பரிசுடன், தாமிரப் பட்டயம் மற்றும் அங்கவஸ்திரம் வழங்கி கெüரவிக்கப்பட்டனர்.
சங்கீத அகாதெமி விருதுகள் மாண்டலின் ஸ்ரீனிவாஸ், கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் பாறசாலா பி.பொன்னம்மாள், கலாமண்டலம் ராஜன் (கதகளி), வசுந்தரா கோம்காளி, அப்துல் ரஷீத் கான் (இந்துஸ்தானி)  உள்ளிட்ட 33 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. இவர்களுக்கு விருதுடன் 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பட்டயம் ஆகியவையும் வழங்கப்பட்டன.
கலைத் துறையில் ஒட்டுமொத்த பங்களிப்புக்கான விருது லீலா வெங்கட்ராமனுக்கு வழங்கப்பட்டது

 

0 comments: