கல்விக்கடன் பெற முடியாமல் அலைகழிக்கப்படும் மாணவர்கள்: மக்களவை உறுப்பினர் புகார்

தருமபுரி, செப். 25: வங்கிகளில் கல்விக்கடன் பெற முடியாமல் மாணவர்கள் அலைகழிக்கப்படுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன் கூறினார்.


 தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில், அவர் பேசியது:
 கல்விக்கடன் வழங்க |25 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. படிப்பறிவு குறைந்த தருமபுரி மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு வங்கியை நாடும் மாணவர்கள், பெற்றோர்களை வங்கிப் பணியாளர்கள் அலைகழிக்கின்றனர்.
 புரியாத சட்டங்களைக் கூறி வேண்டுமென்றே கடனை வங்கி அதிகாரிகள் மறுக்கின்றனர்.
 இதனால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அரசு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க ஆணையிட்ட போதிலும், வங்கியாளர்கள் தங்களது சொந்த வீட்டு பணத்தை தருவதுபோன்று, தேவையற்ற வார்த்தைகளில் உபயோகிக்கின்றனர். சரியான நேரத்தில் கல்விக்கடன் வழங்கப்படாததால், அரசின்மேல் மக்களுக்கு தவறான எண்ணம் ஏற்படுகிறது.
 நிந்தனைகளுக்குள்பட்டு கல்விக்கடன் வழங்க வேண்டும். இல்லையேல் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றார் தாமரைச்செல்வன்.
 மாவட்ட ஆட்சியர் பெ.அமுதா. ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் விஜயகுமார், இந்தியன் வங்கியின் மண்டல துணை பொதுமேலாளர் சடகோபன். முன்னோடி வங்கியின் மேலாளர் மார்க்கெரெட், மகளிர் திட்ட அலுவலர் ஜனகவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

0 comments: