தேசிய அளவிலான ஓவியப் போட்டி 120 பேர் பங்கேற்பு

மதுரை, செப். 25: மதுரையில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் 120 பேர் பங்கேற்றனர்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் பஞ்சாயத்துராஜ் திட்ட சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் தேசிய அளவிலான ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டங்கள்தோறும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய போட்டிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த வகையில் மதுரை மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. தகவல் ஒலிபரப்புத் துறை களவிளம்பரப் பிரிவு சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட 120 பேர் ஓவியங்கள் வரைந்தனர் (படம்).
இதில் 5 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் பரிந்துரைக்கப்படும். அதில் 3 ஓவியங்கள் தேசியப் போட்டிக்கு அனுப்பப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
பிற்பகலில் அதே வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.அசோக்குமார், கள விளம்பரத் துறை அலுவலர் ஏ.சந்திரமோகன், நேருயுவகேந்திரா ஓருங்கிணைப்பாளர் கே.ஜவஹர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

0 comments: