பொறியியல் மாணவர்களின் திறனை அறிய சிறப்பு தேர்வு

சென்னை : பி.இ., முதலாம் ஆண்டு மாணவர்களின் திறனை அறிவதற்காக, சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அடுத்த மாதம் 15ம் தேதி சிறப்பு தேர்வினை நடத்துகிறது. சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அவர்களது திறன்களை மதிப்பிடவுள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்தி, தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவுள்ளது. இத்தேர்வில் கணிதம், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், ஆங்கில மொழி ஆகிய மூன்று பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும்.

இத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள், இன்று முதல் "தீதீதீ.ச்ணணச்tஞுஞிட.ச்ஞி.டிண' இணையதளத்தில் வெளியிடப்படும். சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு, அடுத்த மாதம் 15ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடக்கிறது. இதர தனியார் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தேதியை, பல்கலையின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி விரைவில் அறிவிப்பார்.  இந்த சிறப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் முதல் செமஸ்டர் தேர்வில் மாணவர்களின் செயல்பாடு அடிப்படையில், மாணவர்களுக்கு தேவைக்கேற்ப சிறப்பு தொழில்நுட்ப மற்றும் மென்திறன் பயிற்சி திட்டங்கள் வகுக்கப்படும்.

 

0 comments: