புகையிலைக்கு எதிராக மாணவர்கள் பேரணி

ஸ்ரீபெரும்புதூர், செப். 25:  ஸ்ரீவெங்கடேஷ்வரா பெறியியல் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு தின பேரணி ஸ்ரீபெரும்புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இப்பேரணிக்கு கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் அரவிந்தன் தலைமை தாங்கினார். பின்னனி பாடகி ரஹினா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் துவங்கி பேரணி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம், காந்தி சாலை, தேரடி வழியாக ஸ்ரீபெரும்புதூர் இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் அருகே முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பாதகைகள் ஏந்திச் சென்றனர். கல்லூரி முதல்வர் ராமசந்திரன், தமிழ்நாடு புகையிலை தடுப்பு அதிகாரி நாராயணசாமி, நாட்டு நலப்பணிதிட்ட மாணவர் தலைவர்கள் சோபனா, ராமசுந்தர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

0 comments: