90 சதவீதம் முதியோர் ஆதரவின்றி வேலை செய்கின்றனர்

சென்னை : ""முதியோரில் 75 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஆதரிப்போர் இல்லாததால் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர்,'' என, காவல்துறை நடத்திய விழிப்புணர்வு முகாமில், ஹெல்ப் ஏஜ் இந்தியா சிறப்பு ஆலோசகர் இந்திராணி பேசினார்.சென்னை மாநகர காவல் துறையும், ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனமும் இணைந்து, முதியோருக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல், முதியோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாமை நடத்தியது.முகாமை கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் தொடங்கி வைத்து பேசியதாவது:முதியோருக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள ஒன்பது காவல் மாவட்டங்களில் ஒரு காவல் நிலையத்தில், அக்., 1ம் தேதி முதியோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.பெற்றோரை தவிக்க விடுவோருக்கு தண்டனை தர சட்டத்தில் இடம் உள்ளது. இதில் தமிழகம் முன்னோடியாக இருந்தாலும், இதுபோன்ற வழக்குகள் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்திலும் பதிவாகக் கூடாது என்பதே நம் விருப்பம்.இவ்வாறு ஷகில் அக்தர் பேசினார்.ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவன சிறப்பு ஆலோசகர் இந்திராணி பேசியதாவது:கடந்த 2004 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 8.1 கோடி முதியோர் இருந்தனர். 15 ஆண்டுகளில் இது 17.7 கோடியாகவும், 2040ல் 34 கோடியாகவும் முதியோர் இருப்பவர். இவர்களில் 75 சதவீதம் கிராமங்களில் தான் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் விவசாய, கூலி வேலைகள் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். முதியோர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றிய 100 தன்னார்வலர்களுக்கு பரிசு, சான்றும் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு இந்திராணி பேசினார்.சேஷசாயி உள்ளிட்ட இணை கமிஷனர்கள், ஹெல்ப் ஏஜ் இந்தியா அதிகாரிகள் அன்பழகன், எட்வின் பாபு, தன்னார்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

0 comments: