பத்தில் ஒருவருக்கே வேலை - புதிய கணிப்பு கூறும் தகவல்

மனித வளம் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் மா போய் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. இந்த நிறுவனம் சமீபத்தில் டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு,ஐதராபாத், புனே, ஆமதாபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய  8 நகரங்களில் இந்திய வேலை வாய்ப்பு சந்தை குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வில் வெளியான சில முக்கிய தகவல்கள் இவைதான் :
 இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தை சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது என்ற போதும் இந்த ஆண்டில் பட்டப் படிப்பு முடிப்பவர்களில் பத்து பேரில் ஒருவருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் நிலை இருக்கும். இந்தக் கல்வியாண்டின் இறுதியில் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் பட்டப் படிப்பை முடித்து வெளி வரும் நிலையில், இங்கு 10.5 லட்சம் பணி வாய்ப்புகள் வரை மட்டுமே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.  இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 564 பணி வாய்ப்புகள் இந்தியாவில் ஏற்பட்டது. இந்தக் காலாண்டிலும், அடுத்த காலாண்டிலும் தலா 3 லட்சத்து 20 ஆயிரத்து 400 பணி வாய்ப்புகளே உருவாகும் நிலை உள்ளது. ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., துறைகளைப் பொறுத்தவரை 2007ல் ஏற்பட்ட சர்வதேசப் பொருளாதாரத் தேக்கநிலையினால் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் புதிய பணிநியமனங்கள் பெரும்பாலும் செய்யப்படவில்லை. தற்போது பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வந்தாலும், 2007 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தத் துறைகளுக்கு இருந்த அளவு தற்போது கிராக்கி இல்லை என்பதே உண்மை. ஒரு கணிப்பின்படி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இதே மாதிரியான நிலையே நிலவும் என்றும் கூறப்படுகிறது.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளே பெரும்பாலும் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொலைத் தொடர்பு மற்றும் சில்லறை வணிகத் துறைகளே அதிக அளவு பணி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.  நல்ல பணி வாய்ப்புகளைப் பெறுவது பிரெஷர்ஸ் எனப்படும் புதிதாகப் படிப்பை முடித்து வருபவர்களுக்கே கடினமாக இருக்கும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு இந்த நிலையினால் பெரிய பாதிப்புகள் கிடையாது.


 

0 comments: