தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் 29-ல் தொடக்கம்

புதுதில்லி, செப். 23: தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை வரும் 29ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.

இதற்கான நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் நந்தர்பார் மாவட்டத்தில் நடக்க உள்ளது. முதலாவது அடையாள அட்டை அந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும். இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.
 12 இலக்க அடையாள எண் கொண்ட இந்த அட்டை நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு வழங்கப்படும்.

 

0 comments: