புதுமை ஓவியங்கள்: கோவையில் கண்காட்சி

கோவை: கலைக் கல்லூரி மாணவியின் "இவால்யூஸன் ஆப் கலர் ரெவல்யூஸன்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை ரேஸ்கோர்சிலுள்ள ஜெயம் ஹாலில் நடந்தது. சென்னை கவின் கலைக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவி சுகந்தபிரியா. இவரது 35 வண்ண ஓவியப் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஓவ்வொரு ஓவியங்களும் மிக நுணுக்கமாக, புதிய சிந்தனையுடன், தேர்ந்த கற்பனையில் வரையப்பட்டுள்ளன. மும்முகம் காட்டும் திருமூர்த்தி சிற்ப ஓவியம், அகோரம், சாந்தம், ராஜ தோரணையை காட்டுகிறது. ராஜஸ்தானி பெண்களின் ஓவியம் பெண் சுதந்திரத்தை பேசுகின்றன. அழகாக வீற்றிருக்கும் சிவன், பார்வதியின் ஓவியமானது சிலைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு மறைமுகமாக தெரிவிக்கின்றன. 
இதுகுறித்து, ஓவியர் சுகந்த பிரியா கூறுகையில், ""இது எனது முதல் ஓவியக்கண்காட்சி. அனைத்து விதமான ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. நமக்கென்று தனி ஸ்டைல் ஏற்படுத்திக் கொண்டு, கடினமாக உழைத்தால் ஆத்மார்த்தமான ஓவியங்கள் வரைய முடியும்,'' என்றார். துவக்க விழாவில், மேயர் வெங்கடாசலம், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சண்முகப்பிரியா, சாகித்ய கலா அகாடமி நிறுவனர் முருகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


 

0 comments: