வருது...வருது... இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள எண் : யூனிக் ஐ.டி.நம்பர்..!

மைசூர்: இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள எண் வழங்கும் பணியை மத்திய அரசு துவக்கியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் தும்கூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் யூனிக்யூ ஐ.டி.என்றழைக்கப்படும் சிறப்பு அடையாள எண்ணை ஒவ்வொருவருக்கும் வழங்க உள்ளது. இதனை யூனிக்யூ ஐடென்டிபிகேசன் அதாரிட்டி ஆப் இந்தியா சோதனை அடிப்படையில் வழங்க உள்ளது.யூஐடிஏஐயின் கர்நாடக மாநில பிரிவு 12 டிஜிட்டல் நம்பரை வரும் அக்டோபரில் வழங்குகிறது. யூஐடிஏஐயின் துணை இயக்குனர் அசோக் தல்வாய் குறிப்பிடும் போது இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த நம்பரை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.ஆந்திரபிரதேச மாநிலம் ஏற்கனவே இது போன்ற நம்பரை வழங்க தயாராக இருந்தாலும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அவை தள்ளிப்போடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இந்த யூனிக் நம்பரை வழங்குவதற்காகன அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இதற்கான உத்தரவு கிடைத்தால் வரும் அக்டோபர் மாதம் மத்தியில் துவங்கி டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். என அவர் தெரிவித்தார்.

 

0 comments: