பெரம்பலூரில் கேந்திர வித்யாலயா பள்ளி

பெரம்பலூர், ஜூன் 30:
பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி துவங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக கலெக்டர் விஜயக்குமார் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. குறைகளை கேட்டறிந்து கலெக்டர் விஜயக்குமார் பேசியதாவது: மா ணவர்களின் கல்வி வளர்ச்சி யை கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவ ட்டத்தில் கடந்த ஆண்டை விட மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் 6.59 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின்கீழ் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளி துவங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு வரை வகுப்பு நடத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி துவங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பாடு அடையும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட அளவு பணி மேற்கொள்பவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும். விசுவக்குடி நீர்த்தேக்க திட்டத்திற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தடையின்றி வழங்கப்படும் என்றார். டிஆர்ஓ பழனிச் சாமி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளா ண்மை) ராஜராஜசோழன் கலந்து கொண்டனர்.

 

0 comments: