தினமும் ஒரு திருக்குறள், தெளிவுரையோடு 2011ம் ஆண்டுக்கான காலண்டர் தயார்

http://img.dinamalar.com/data/thumb/thumb_88323.jpg
சிவகாசி :சிவகாசி அச்சக உரிமையாளர் ஒருவருக்கு, தமிழ் மீது தீராத காதலால் தினமும் ஒரு திருக்குறள், தெளிவுரையோடு 2011க்கான காலண்டரை தயாரித்துள்ளார்.
சிவகாசியில் புத்தாண்டிற்கான தினசரி, மாத காலண்டர்களை பல நிறுவனங்கள் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிடுகின்றன. சிவகாசியைச் சேர்ந்த சிவநாதபாபு, தமிழ் மீதுள்ள பற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுமையைப் புகுத்தி தமிழ் மணம் வீசும் காலண்டரை அறிமுகம் செய்து வருகிறார். 2008 காலண்டரில், "மறைந்த தமிழ் அறிஞர்களின்' வாழ்க்கை வரலாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.தினசரி தாளை மடக்கினால், கடவுள் வாழ்த்து பாடல் ஒலித்தது. 2009ல், "வாழும் தமிழ் அறிஞர்கள்' என்ற தலைப்பில் 365 அறிஞர்களின் போட்டோ, வாழ்க்கை குறிப்பு, போன் எண், பிறமொழிச் சொல்லுக்கு தூய தமிழ்ச் சொல், தினமும் ஒரு திருக்குறள் கேட்கும் வகையில் காலண்டர் தயாரித்தார். 2010ல் தமிழ் எண்களால், தமிழ் மாதங்களை குறிப்பிட்டு காலண்டர்கள் வெளியிட்டார்.
தமிழ் மொழி காலண்டர், வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால் ஆண்டுதோறும் நஷ்டத்தில் மூழ்கி வருகிறார்.இருப்பினும், மனம் தளராமல் 2011க்காக, "திருக்குறள் நாள்காட்டி' என வித்தியாசமான காலண்டர் தயாரித்துள்ளார். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் படம், முகப்பு அட்டையை அலங்கரிக்கிறது. சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், யேசு கிறிஸ்து, மகாவீரர், புத்தர், லாட்சே, வியாசர், மனு, ஹம்முராபி பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

தினமும் ஒரு திருக்குறள்: காலண்டர் தினசரி தாளில் எண்கள், தமிழ், ஆங்கில மாதம், நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய சிறப்பம்சமாக தினமும் ஒரு திருக்குறள், அதற்கு தெளிவுரை உள்ளது. ஆங்கிலத்தில் திருக்குறளை பிரசுரித்துள்ளார். 365 குறள்கள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை 25 ரூபாய்.

இதுகுறித்து இவர் கூறுகையில், "மூன்று ஆண்டுகளில் 1,330 குறள்களையும் நாள்காட்டியில் வெளியிட உள்ளேன். கோவை செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வாசித்த 1,100 அறிஞர்களின் கட்டுரைகளை சுருக்கி, 365 பேரின் போட்டோவோடு புதிய காலண்டர் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன்' என்றார்.

 

3 comments:

Rajasekaran said...

அய்யா!! இந்த தங்களின் சீரிய முயற்சியை காணும்போது மனதுக்கு மகிழ்வாக இருந்தாலும், வணிக ரீதியாக தாங்கள் வெற்றி பெறவில்லை எனும்போது சிறிது துயரடையவும் செய்கிறது. ஆயினும் தாங்கள் தமிழ் மீது கொண்ட காதல் போற்றத்தக்கது. ராஜசேகரன், 957, 7th cross, swarnanagar, robertsonpet, Kolar Gold Fields, Karnataka-563122. என்ற முகவரிக்கு 40 நாட்காட்டிகள் V.P.P. வாயிலாக அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன். (டிசம்பர் 15 கு மேல் ஜனவரி 1 க்குள்) இதுதான் என்னால் முடிந்தது..!! நன்றி. வணக்கம் அய்யா..!!

saravanakumar sps said...

p saravanakumar
237A mettustreet
keerapalayam po
chidambaram t.k
cuddalore dist
pin ..608602
அய்யா மேலே உள்ள் முகவரிக்கு இருபது நாட்காட்டிக்ள்
v p p வாயிலக் அனுப்பி வைக்க்வும்

ஜோதிடச் சுடர் said...

நண்பர் திரு.சரவணகுமார் அவர்களின் தமிழ்ப் பற்று வாழ்க. இவரைப் போன்ற நல் உள்ளங்களால்தான் தமிழ்ப் பற்றாளர்க்குத் தக்க அணிகலணான மரியாதையும் மகிழ்வும் இயல்பாகவே ஏற்படுகின்றன.