மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வருக்கு அனுமதி சீட்டு வினியோகம்

திருச்சி: அரசுத் தேர்வுத்துறை மண்டலத்துணை இயக்குநர் பவானி வெளியிட்ட அறிக்கை:செப்டம்பர், அக்டோபர் 2010 மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பொதுத்தேர்வு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் நான்காம் தேதி வரை நடக்கிறது. தேர்வு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு நேற்று (16ம் தேதி) முதல் நாளை வரை அனுமதிச்சீட்டு வினியோகிக்கப்படுகிறது.தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் கீழ்ண்ட தேர்வு மையத்தில் அனுமதிச்சீட்டினை பெற்றுக்கொண்டு, அத்தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும்.கல்வி மாவட்டம் வாரியம் மையம் விபரம்:புதுக்கோட்டை-ராணியார் (பெ) மேல்நிலைப்பள்ளி, கரூர்-பசுபதீஸ்வரா நகராட்சி (பெ) மேல்நிலைப்பள்ளி, அரியலூர்-அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பழுõர், பெரம்பலூர்- பனிமலர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி-செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலோ இந்தியன் தேர்வர் மட்டும்).நாகப்பட்டிணம்-நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி வெளிப்பாளையம், திருவாரூர்-ஸ்ரீ ஜி.ஆர்.எம். (பெ) மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்- டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. அனுமதிச்சீட்டின்றி தேர்வு எவரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டர்.தேர்வுக்குப் பின் மதிப்பெண் சான்றிதழை தேர்வருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கும் பொருட்டு சுயவிலாசமிட்ட 300 ரூபாய்க்கு, தபால்வில்லை ஒட்டிய உறையினை அனுமதிச்சீட்டு வினியோக மையத்தில் அவசியம் ஒப்படைத்து அனுமதிச்சீட்டினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

0 comments: