"பியோனிக்ஸ் 2010' கூட்டமைப்பு துவக்கம் "

பெரம்பலூர்: சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை சார்பில், "பியோனிக்ஸ் 2010' கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். விழாவில், திட்ட மேலாளர் ராகவேந்திரன், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள நுட்பம், வளர்ச்சி பற்றி பேசினர். விழாவில் கல்லூரி முதல்வர் தாயுமாணவன், துணை முதல்வர் நந்தக்குமார் பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.

 

0 comments: